அடுத்த 1 மாதம் சூரியன் பகவனால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Surya Gochar 2023: சூரியன் ரிஷபம் ராசியில் இன்று காலை இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 1 வருடத்திற்கு பிறகு இன்று ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சி சில ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2023, 11:23 AM IST
  • சூரியன் பகவான் மாதம் ஒருமுறை பெயர்ச்சி அடைவார்.
  • தற்போது மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார்.
  • சூரியன் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படும்.
அடுத்த 1 மாதம் சூரியன் பகவனால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் title=

ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சி 2023: கிரகங்களின் அரசனான சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். இப்படி ஒரு வருடத்தில் 12 ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைவார். இன்று, மே 15, 2023 அன்று, ஒரு வருடம் கழித்து, சூரியன் ரிஷபம் ராசிக்குள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சுக்கிரனின் ராசியில் சூரியனின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். மறுபுறம், இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக மங்களகரமானதாக இருக்கும். மேலும் சூரியன் ஜூன் 15 வரை ரிஷப ராசியில் தான் இருப்பார், இது சில ராசிக்காரர்களுக்கு நிறைய செல்வத்தையும் வெற்றியையும் தரும். இந்த நிலையில் சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தங்கம் போல் ஜொலிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் சூரியனின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும்

கடக ராசி: கடக ராசியின் 11வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே ரிஷப ராசியில் சூரியனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின்  வாழ்க்கையில் சாதகமான நிகழ்வுகள் இருக்கும். பழைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணி பாராட்டப்படும். புதிய கார் வாங்கலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், வாழ்க்கை துணை உங்களுக்கு சாதகமாக இருப்பார்.

மேலும் படிக்க | Weekly Horoscope: அடுத்த வாரம் இந்த ராசிகளுக்கு அட்டகாசமாக இருக்கும்

சிம்ம ராசி: சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார், மேலும் சிம்ம ராசியின் 10வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களிடம் சூரியன் எப்போதும் கருணையுடன் இருப்பார். இதனால் இந்த சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களையும் தரப் போகிறது. திடீரென்று பணம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.

தனுசு ராசி: தனுசு ராசியின் 6வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தை தரும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு இதுவே நல்ல நேரம். சில சந்தர்ப்பங்களில், முடிவு இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக ஏற்படலாம், இதன் காரணமாக நீங்கள் மிகுந்த நிம்மதியை உணருவீர்கள். தடைபட்ட அனைத்து வேலைகளும் முடிவடையும். இதுவரை தடைப்பட்ட பணிகள் தீர்வுக்கு வரும்.

மீன ராசி: மீன ராசியின் 3வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே சூரியனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சியாக அமையும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றத்தை பெறலாம். பண வரவு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவி இருக்கும். இந்த நேரத்தில் காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | சனி பகவானை வழிபடும்போது மறந்தும் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News