சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ஆண்டு முழுவதும் அருள்புரிவார் சனி

Saturn Transit: சனி 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2022, 05:56 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
  • குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ஆண்டு முழுவதும் அருள்புரிவார் சனி title=

சனிப் பெயர்ச்சி 2023: அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவானின் பெயர்ச்சிக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் உண்டு. சனி பகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். 

வேத ஜோதிடத்தின்படி, ஜனவரி 17, 2023 மிகவும் சிறப்பான நாள். ஏனெனில் இந்த நாளில் சனி 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பிரச்சனைகளை ஏற்படுத்தும். மறுபுறம், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மேஷ ராசியினருக்கு இந்த சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும்.

மேலும் படிக்க | புத்தாண்டில் கிரக மாற்றங்கள்: அனுகூலமான பலன்களை பெறப்போகும் ராசிகள் இவைதான் 

ரிஷபம்

சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களின்  அதிர்ஷ்டமும் முற்றிலும் மாறும். இந்த ராசிக்காரர்கள் தொழில் சம்பந்தமான விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். இவர்கள் கை வைக்கும் அனைத்து வேலைகளிலும் நல்ல பலன் கிடைகும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அபரிமிதமான பலன்களை அள்ளிக்கொடுக்க உள்ளது. உங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சி இருக்கும். புத்தாண்டில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி ஆதாரம் ஏற்படும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

கன்னி

சனியின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மிகவும் சிறப்பாக அமையும். உங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். மேலும் நிதி நிலையிலும் பலம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 2நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், செல்வம் பெருகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News