செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்.. நினைத்தது நடக்கும்

Venus Mars conjunction in Leo: சுக்கிரம் மற்றும் செவ்வாயின் இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2023, 03:19 PM IST
  • சுக்கிரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையின் விளைவால், மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும்.
  • திடீர் பண வரவால் நிதி நிலை வலுவாகும்.
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்.. நினைத்தது நடக்கும் title=

சிம்மத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் தங்கள் ராசியை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியில் இருக்கும்போது அந்த ராசியில் மற்றொரு கிரகமும் பெயர்ச்சி ஆகி வரும். அப்படிப்பட்ட தருணங்களில் கிரகங்களின் சேர்க்கை நடக்கும். கிரகங்களின் சேர்க்கை யுதி என அழைக்கப்படுகின்றது. 

இப்படிப்பட்ட சேர்க்கைகளால் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக சேர்க்கைகளின் தாக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். இவை சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு பிரச்சனைகளையும் அளிக்கும். இப்போது கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாயும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் இணைந்து சிம்ம ராசியை அடைந்துள்ளனர். இந்த இரு கிரகங்களின் கூட்டணியும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சுக்கிரம் மற்றும் செவ்வாயின் இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது. இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளமாக பெருக்கெடுக்க உள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன்-செவ்வாய் இணைவதால் இந்த ராசிகளில் சுப விளைவுகள் ஏற்படும்: 

மேஷ ராசி

சுக்கிரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையின் விளைவால், மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். திடீர் பண வரவால் நிதி நிலை வலுவாகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் அலுவலக பணிகளில் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் வெற்றிக்கான நல்ல செய்திகள் கிடைக்கும். நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதர-சகோதரிகளின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பெறுவீர்கள். இதற்கிடையில் புனித யாத்திரை சென்றால் சுக்கிரனின் சுப பலன்கள் கிடைக்கும். 

மேலும் படிக்க | பூசத்தில் சூரியன்... செல்வ செழிப்பை அனுபவிக்கும் ‘சில’ ராசிகள்!

தனுசு ராசி

செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். படைப்பில் வெற்றி வெறுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் கூடும். வேலை சம்பந்தமாக சிறிய அல்லது பெரிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலை மேம்படும். எங்கிருந்தோ எதிர்பாராத இடங்களில் இருந்து திடீரென பணம் வர வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் இணக்கமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் நடத்தையை சரியாக பராமரிக்க வேண்டும். 

கடக ராசி

சுக்கிரன் மற்றும் செவ்வாயின் சேர்கையின் தாக்கத்தால் நீங்கள் செல்வத்தையும் செழிப்பையும் பெறுவீர்கள். பணத்தை சேமிக்க இது நல்ல நேரமாக இருக்கும். இது முதலீட்டுக்கும் நல்ல நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் பணம் சேமிப்பதற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பேச்சு மற்றும் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில்-வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பெரிய லாபம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்புகளால் அபரிமிதமான லாபம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமூகத்தில் நற்பெயர் கூடும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! 12 ராசிகளில் பலன்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News