மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

Sevvai Peyarchi Palangal: ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் கிரகம் மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறது. இதனால் சில ராசிகள், அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2024, 12:11 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! title=

Sevvai Peyarchi Palangal: ஜோதிடத்தில் கிரக பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. இதன் தாக்கத்தை அனைத்து ராசிகளும் ஏதோ ஒரு வகையில் உணர்வார்கள். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் கிரகம் மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறது. இதனால் சில ராசிகள், அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் மீன ராசியில் பிரவேசிப்பார். ராகு ஏற்கன்வே மீனத்தில் உள்ள நிலையில், மீனத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை ஏற்படும். இதனால் மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகள் பலனடைவார்கள். அவர்களது பொற்காலம் ஆரம்பம் எனலாம்.

மிதுன ராசி (Gemini Zodiac Sign)

மிதுன ராசிக்காரர்களுக்கு மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். பதவி உயர்வும் உதவி உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் பெரிய வெற்றிகளை பெறலாம். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். நிதி நிலையை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மனதளவில் ஒருவித பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவு கிடைக்கும். முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கல்கள் தீரும். 

கடக ராசி (Cancer Zodiac Sign)

மீனத்தில் செவ்வாயின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் சாதகமான நன்மைகளை கொடுக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்பு ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். முயற்சிகளால் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். இந்த காலத்தில் பிற ஊர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிடும் அனைத்து பணிகளும் நன்றாக நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | Jupiter transit: 38 நாட்களில் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள், பொற்காலம் ஆரம்பம்

விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீனத்தில் செவ்வாயின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பண வரவு அதிகமாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்பு அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News