மார்ச்சில் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு சுக்கிர திசை!

Venus Transit Effects in Tamil: சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் மார்ச் மாதம் இருமுறை பயிற்சியாக இருக்கிறார். இதனால், அதிர்ஷ்டம், நிதி ஆதாயம், பதவி உயர்வு, மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்தையும் அனுபவிக்க போகும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2024, 11:08 PM IST
  • மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சரிப்பார்.
  • ஆடம்பர வாழ்க்கையையும் இன்பத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.
  • சுக்கிரன், மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று மீனத்திற்கு செல்கிறார்.
மார்ச்சில் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு சுக்கிர திசை! title=

Most LUCKY Zodiacs of March 2024 Venus Transit: ஆடம்பர வாழ்க்கையையும் இன்பத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், மார்ச் மாத இரண்டு முறை பெயர்ச்சியாக இருக்கிறார். மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சரிப்பார். பின்னர் மார்ச் மாதம் கடைசி நாளில் மீனத்திற்கு செல்வார். மார்ச் ஏழாம் தேதி என்று கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரன், மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று மீனத்திற்கு செல்கிறார். சுக்கிரன் (Venus Transit) மீன ராசியில் பிரவேசிக்கும் போது, அங்கே ஏற்கனவே இருக்கும் சூரியனுடன் அவர் இணைகிறார். இதனால் பொதுவாக அனைவருக்குமே சுப பலன்கள் கிடைக்கும் என்றாலும், குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. அவர்கள் சுக்கிர திசையை அனுபவிப்பார்கள்.

ரிஷப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசியினருக்கு சுக்கிர பகவானின் அருளால், வேலையில் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். பண வரவினால் நிதிநிலை சிறப்பாக இருக்கும் என்பதோடு, குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உறவுகள் மத்தியில் இணக்கமும் அன்பும் குறையாமல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனால் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்ம ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசியினர், சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, செல்வத்தை ஈட்டும் வாய்ப்பை அதிகமாக பெறுவார்கள். பங்குச்சந்தை அல்லது பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்தினருடன் உல்லாச பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். நீங்கள் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும்.

துலாம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் இருக்கும் நிலையில், இவர்களுக்கு வாழ்க்கையில் இன்பத்திற்கு குறைவே இருக்காது. உயர்வு சம்பள உயர்வு நினைத்த அளவில் கிடைக்கும். வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்பவர்களுக்கு, முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மேலும் படிக்க | கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்!

தனுசு ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசியினர் சுக்கிரனின் அருளால், பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவார்கள். புதிய கார் அல்லது வீடு வாங்கும் வாய்ப்பு ஏற்படும். நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

கும்ப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசியினர் சுக்கிரன் பெயர்ச்சியினால், வாழ்க்கையில் இதுநாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து, முழுமையாக விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவார்கள். இவர்கள் விரும்பிய உதவி எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்கும். குடும்ப வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குபேர சிலையை தவறுதலா கூட இந்த திசையில் வைக்காதீங்க.. தரித்திரம் ஏற்படலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News