ஆயில்ய நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்! ஜூலை 5 ராசிபலன்!

Daily Rasipalan 2024 July 08 : 2024 ஜூலை எட்டாம் நாளான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள் இவை... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2024, 06:33 AM IST
  • ஜூலை 8 ஜோதிட ராசிபலன்கள்
  • ஆயில்ய நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை
  • சிவனை பூஜித்தால் லட்சுமியின் அருள் நிச்சயம்!
ஆயில்ய நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்! ஜூலை 5 ராசிபலன்! title=

ஜோதிடத்தின் அடிப்படையில் நமது செயல்களுக்கு ஏற்றவாறே நமது வாழ்க்கை அமைகிறது. அது எப்படி இருக்கும் என்பதை ஊகமாக கணிக்கும் கலை ஜோதிடம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.

குரோதி ஆண்டின் ஆனி 24ம் நாள் வளர்பிறை திருதியை, ஆயில்யம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை நாள், 08-07-2024

மேஷம்

மனதில் திருப்தியற்ற நிலை ஏற்படும், சாதகமான விஷயங்களும் பாதகமாக மாறும் காலம் இது என்பதால், பொறுமையும் அமைதியும் அவசியம். கவனத்துடன் செயல்பட்டால் மனகசப்புகளை தவிர்க்கலாம். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தில் மூத்த சகோதரர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான காலம் இது.

ரிஷபம் 
கனிவான பேச்சுக்கள் மூலம் நம்பிக்கை மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் அலுவலகத்தில் இருந்துவந்த பொறுப்புகளும் கடமைகளும் குறைவதால், சொந்தத் தொழில் செய்யலாம் என்ற எண்ணங்கள் மேலோங்கும். இறைவழிபாடு நம்பிக்கையை அதிகரிக்கும்.

மிதுனம் 
பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது என்றாலும், அதனை அப்படியே 100 சதவிகிதம் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாடம் கொடுக்கும் வகையில் புதிய அனுபவம் ஒன்று ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். பணி புரிபவர்கள், முதலாளியின் எண்ணத்திற்கு ஏற்றவாறு செயல்படுவது நல்லது. சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.  குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கடகம் 
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் செயல்கள் எரிச்சல் கொடுத்தாலும், அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பொறுமையுடன் செயல்படவும், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், புதிய முதலீட்டைத் தவிர்க்கவும்.  அரசு சார்ந்த காரியங்களில் சிந்தித்து, நிதானமாக செயல்படவும். 

மேலும் படிக்க | குப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!

சிம்மம் 
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து நடந்துக் கொண்டால் நல்லது. எதிர்பாராமல் சில மாற்றங்கள் ஏற்படும். வேற்றுமொழி பேசுபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சோர்வை ஏற்படுத்தும். உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் காலம் இது.  

கன்னி 
கனிவாக நடந்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றாலும், சட்டென்று கோபம் வருவதை கட்டுப்படுத்திக் கொள்ள கஷ்டமாக இருக்கும். சினத்தை அடக்காமல் சீறினால் அவப்பெயர் தான் உருவாகும். குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். 

துலாம் 
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அரசு சம்பந்தமான விஷயம் ஒன்று நல்ல செய்தியைக் கொடுக்கும், மனதில் இருந்த எதிர்பார்ப்புகள் கைகூடும் காலம் இது. ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது செலவை அதிகரித்தாலும், தவிர்க்க முடியாததாக இருக்கும், சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது.  

விருச்சிகம் 
எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும் அனுமானங்களும் கவலைகளை அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலத்திற்காக எடுக்கும் சில முடிவுகள் பிடித்தமானதாக இல்லாவிட்டாலும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்வீர்கள்.  பயண வாய்ப்புகளை நிதானமாக ஆலோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை மனதில் பலம் தரும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. வெற்றிகள் குவியும்!!

தனுசு 
குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது, பொறுமையுடன் செயல்படவும். வேலையில் ஆர்வம் குறைந்தாலும், அதுதான் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது புரியும். எந்த செயலை செய்தாலும்  சிந்தித்து முடிவெடுக்கவும். பயணங்கள் சோர்வைக் கொடுக்கும். எதிர்பாராத செலவுகள் மனதில் கலக்கத்தைக் கொடுக்கும். மனதில் கவலைகள் சூழும்.  

மகரம் 
சுப காரியங்கள் தொடர்பாக ஏற்படும் முன்னேற்றங்கள் நிம்மதி தரும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் உந்துதல் ஏற்படும் அளவுக்கு மிகப் பெரிய சம்பவம் நடைபெறும். குடும்பத்தில் மனமகிழ்ச்சியைத் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும்.  

கும்பம்
குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். இதுவரை கவலை கொடுத்து வந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தால் ஆதாயம் அடைவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.  

மீனம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து நடந்துக் கொண்டால் நிம்மதி ஏற்படும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பிடித்தமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரிய அஸ்தமனத்திற்கு பின்.. ‘இவற்றை’ தானம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News