லக்ஷ்மி நாராயண யோகம்... அதிர்ஷ்டம் பெறும் ராசிகளும்... சில பரிகாரங்களும்..!!

ஆஷாட மாத சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியுடன் கூடிய நன்நாளில், புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம்  உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில் தடை அனைத்தும் விலகி, அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 7, 2024, 08:30 PM IST
  • புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது.
  • வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.
  • ஜூலை 8 ஆம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?
லக்ஷ்மி நாராயண யோகம்... அதிர்ஷ்டம் பெறும் ராசிகளும்... சில பரிகாரங்களும்..!! title=

நாளை, திங்கட்கிழமை, ஜூலை 8, சந்திரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறப் போகிறார். ஆஷாட மாத சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியுடன் கூடிய நன்நாளில், புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம்  உருவாகிறது.  இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தடை அனைத்தும் விலகி, அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். நாளை அதாவது ஜூலை 8 ஆம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அவர்களின் தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்ய விரும்பினால், நாளை மிகவும் நல்ல நாளாக இருக்கும்.  பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள், மாணவர்கள் கல்வித் துறையில் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அனைவருடனும் உங்கள் உறவு நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் நீடித்து வந்த பதற்றம் தீரும்,

ரிஷபம் ராசிக்காரர்களுக்கான திங்கட்கிழமை பரிகாரம்: தடைகள் விலக, திங்கட்கிழமை விரதம் அனுஷ்டித்து, சிவலிங்கத்திற்கு ருத்ராட்ச அர்ச்சனை செய்யுங்கள். மேலும், சிவன் கோவிலில் காலையிலும் மாலையிலும் ருத்ராட்ச ஜெபமாலையுடன் மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்

கன்னி

ஜூலை 8ஆம் தேதி கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. சொந்தமாக தொழில் செய்து வரும் இந்த ராசிக்காரர்கள் புதிய யோசனைகளுடன் தொழிலை முன்னெடுத்துச் சென்று, வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களின் வீட்டிற்கு முக்கிய நபர் வரக்கூடும்.  சகோதர சகோதரிகளின் உதவியால் பல பணிகள் முடிவடையும். அவர்கள் வழங்கும் அறிவுரைகளும் உங்கள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும்.

கன்னி ராசிக்கான திங்கட்கிழமை பரிகாரங்கள்: வேலையில், தொழிலில் முன்னேற்றம் அடைய திங்கட்கிழமை சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். பிறகு ஒரு செப்புப் பாத்திரத்தில் சிறிதளவு நிரப்பி, ஓம் நம சிவாய என்று ஜபித்துக் கொண்டே வேலை அல்லது தொழில் செய்யும் இடத்தில் தெளிக்கவும்.

தனுசு

தனுசு ராசிரகளுக்கு நாளை அதாவது ஜூலை 8ம் தேதி குறிப்பாக பலன் தரும் நாளாக இருக்கும். தீட்டிய திட்டங்களில் வெற்றி பெறுவதோடு, தங்களுக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதிலும் வெற்றி பெறுவார்கள்.  பண வரவின் மூலம் நிதி நிலை பலப்படும். உங்கள் வேலையை மாற்ற திட்டமிடுபவர்களுக்கு, நாளை ஒரு நல்ல நாளாக இருக்கும், பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் எல்லாம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உடல் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டு வந்திருந்தால், உங்கள் கவலைகள் நாளை நீங்கும்.

தனுசு ராசிக்கான திங்கட்கிழமை பரிகாரங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவ, கோதுமை மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யவும். பின்னர் அதை ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு, நாளை அதாவது ஜூலை 8 ஆம் தேதி இனிய நாளாக இருக்கும். கடந்த கால அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள். இலக்குகளை அடைய தீவிரமாக பணியாற்றுவார்கள்.  முதலீட்டிலும் நல்ல லாபம் கிடைக்கும். கல்வி, வேலை அல்லது பயணத்திற்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படும். யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், நாளை உங்கள் கடன் முழுவதும் அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  உங்கள் மனதின் இருந்த சுமை விலகும். 

மகர ராசிக்காரர்களுக்குகான திங்கட்கிழமை பரிகாரங்கள்: உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற, திங்கட்கிழமை விரதம் இருந்து, சிவலிங்கத்திற்கு தேன், நெய், பால் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைய்வேத்தியம் செய்யவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நாளை அதாவது ஜூலை 8ஆம் தேதி நன்மை நிறைந்த நாளாக இருக்கும். மீன ராசிக்காரர்களின் வாழ்வில் சூந்திருந்த கருமேகங்கள் விலகி, நிம்மதி பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நாளை வேலையில் அங்கீகாரத்தை பெறுவார்கள். மேலதிகாரிகளின் முன்னிலையில் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை தேடும் சிலருக்கு, நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.  குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். தந்தையின் ஆசீர்வாதத்துடன், விலையுயர்ந்த பொருள் அல்லது சொத்தை வாங்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நாளை நிறைவேறும்.

மீன ராசிக்காரர்களுக்கான திங்கட்கிழமை பரிகாரம்: அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்க, திங்கட்கிழமை விரதம் இருந்து, சிவலிங்கத்திற்கு பால், தண்ணீர், தயிர், வில்வ இலை, ஆகியவற்றை சமர்ப்பித்து, சிவ சாலிசாவை பாராயணம் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பண்டரிபுரம் விட்டலனுக்கு பாதயாத்திரை! பால் காவடி தயிர்-காவடி என லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News