அன்புள்ள மேஷ ராசிக்காரர்களே, உங்கள் அன்புக்குரியவர்களை ஆச்சரியப்படுத்த உள்ளீர்கள். கடகம், உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சிம்மம், இணக்கத்துடன் முன்னேறுங்கள். இன்று உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? மேஷம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், ரிஷபம், மிதுனம், கடகம், தனுசு, கும்பம், மகரம், மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தைப் பாருங்கள்.
மேஷம்:
இன்றைய தினம் ஏதேனும் சிறப்பான ஒரு விஷயத்தை செய்து உங்கள் அன்புக்குரியவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள், உங்கள் அன்புக்குரியவருடனான உறவு இன்னும் இனிமையாக மாறும். உங்களை சுற்று உள்ள அனைவரையும் நீங்கள் நன்றாக கவனித்து கொள்வீர்கள், இது உங்கள் மரியாதையை உயர்த்தும். உங்கள் நட்பு வலுவாக இருக்கும்.
மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!
ரிஷபம்:
உங்கள் மனதில் உள்ளதை பேசும்போது நீங்கள் தயக்கம் காட்டுவீர்கள், எனவே உங்கள் அன்பைக் காட்டுவதில் அவசரம் காட்டுவதைத் தவிர்க்கவும். உணர்ச்சிகரமான விஷயங்களில் பொறுமையாக இருங்கள், உங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சியைக் கவனித்துக் கொள்ளுங்கள். உறவினர்களை சந்திப்பது அல்லது பொழுதுபோக்கும் வகையில் பயணம் மேற்கொள்வது பற்றி யோசிக்கலாம்.
மிதுனம்:
மறக்கமுடியாத தருணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, உங்கள் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அந்த விஷயத்தில் நீங்களும் ஈடுபாடு காட்டுவீர்கள். குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.
கடகம்:
உங்களுக்கு சில இனிமையான செய்திகள் காத்திருக்கிறது, சில எதிர்பாராத சந்திப்புகள் நன்மை பயக்கும், உங்கள் அன்புக்குரியவர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும், இருவருக்குள்ளும் உரையாடல் மேம்படும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்போது உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்:
உங்கள் அன்புக்குரியவருடனான உறவு ஆரோக்கியமாக இருக்கும், உங்கள் காதலன்/காதலியிடம் உங்கள் மனதில் பட்டதை பேச முடியும், அவர்களுடன் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நட்புகள் நெருக்கமாகி, மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் தருணங்கள் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட உறவுகளும் குடும்ப சூழ்நிலையும் மேம்படும், நீங்கள் நன்றியுள்ளவர்களாக உணருவீர்கள்.
கன்னி:
இரு மனசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். விவாதங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும், உணர்ச்சிகரமான விஷயங்களில் எச்சரிக்கையாகவும் இருங்கள். உங்கள் இரத்த உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், நண்பர்களின் சகவாசம் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும்.
துலாம்:
அன்பு, பாசம் போன்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட உறவுகள் வலுவாக இருக்கும் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தை மேம்படும், ஆனால் உணர்ச்சிகரமான விவாதங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் இனிமை இருக்கும், உங்கள் நணபர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!
விருச்சிகம்:
உங்கள் உறவுகளில் ஒற்றுமையை அதிகரிக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள், உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சமநிலையைக் கடைப்பிடிப்பீர்கள். உங்கள் நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் சக ஊழியர்களின் அறிவுரைகளைக் கேட்டு பகுத்தறிவை பெருக்கிக்கொள்ளுங்கள். விவாதங்களில் பொறுமையைக் கடைபிடியுங்கள்.
தனுசு:
இன்றைய நாள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட நேரிடும், உறவினர்களுடன் பழகுவதற்கான சுமூகமான சூழல் ஏற்படும். உங்கள் உறவுகள் வலுப்பெறும், மேலும் அவர்களின் தேவைகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் பழைய வகுப்பு நண்பர்களை சந்தித்து இனிமையான நினைவுகளை மீண்டும் கொண்டு வரலாம். உங்கள் மனக் கூர்மையும் தெளிவாக இருக்கும்,
மகரம்:
பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதிலும், உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குறுகிய மனப்பான்மையையும் விட்டுவிடுவீர்கள், தனிப்பட்ட விஷயங்களில் நிறைய முயற்சிகளை செய்வீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
கும்பம்:
வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும், உங்கள் உறவுகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் வலுவான உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடனான உங்கள் பிணைப்பு வலுவாகும்.
மீனம்:
இன்று நீங்கள் பழகும் அனைவரிடமும் மரியாதையைப் பேணுவீர்கள், மனதுக்கு பிடித்தவரின் மீது அதிக அன்பை காட்டுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராடுவீர்கள், மற்றவர்களின் தேவைகளுக்கு செவி சாய்ப்பீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ