17 நாளில் வரப்போகும் திருமண யோகம்..! இல்லற வாழ்க்கைக்கு ரெடியாகலாம்

செவ்வாய் கிரகம் இன்னும் 17 நாட்களில் பெயர்ச்சி அடைய இருப்பதால் 3 ராசிகளுக்கு மங்கள யோகம் வர இருக்கிறது. விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2023, 05:41 PM IST
17 நாளில் வரப்போகும் திருமண யோகம்..! இல்லற வாழ்க்கைக்கு ரெடியாகலாம்  title=

செவ்வாய்ப் பெயர்ச்சி மக்களின் தைரியம்-பலம், நிலம்-சொத்து, சகோதரனுடனான உறவுகள், கோபம் போன்றவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது தவிர திருமணத்திற்கு செவ்வாய் ஸ்தானம் மிகவும் முக்கியம். அத்தகைய செவ்வாய் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். மே 10 ஆம் தேதி கடக ராசியில் நுழைகிறார். ஜூலை 1, 2023 வரை கடக ராசியில் இருப்பார். கடகத்தில் செவ்வாய் நுழைவது 3 ராசிகளுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திருமணம் ஆகாமல் இருக்கும் அந்த ராசிக்காரர்களுக்கு 17 நாட்களுக்கு பிறகு திருமண யோகம் நிச்சயம் உண்டாகும். 

மேஷம்: 

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். செவ்வாயின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் திருமண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானத்தில் இனிமேல் வரவு அதிகமாகும். புதிய வாகனம் வாங்கலாம். சொந்த தொழிலுக்கு நேரம் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் இந்த நேரத்தில், உங்கள் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க | 36 ஆண்டுக்கு பிறகு குரு-ராகு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ஜாக்கிரதை

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். செலவுகள் குறைவாக இருக்கும். சேமிக்க முடியும். தொழில், வியாபாரம் இரண்டிற்கும் நல்ல நேரம். அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். எதிரிகளை வெல்வார்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கும்பம்: 

செவ்வாய்ப் பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு தொழிலில் நன்மைகளை தரும். உங்கள் பணி பாராட்டப்படும். பதவி உயர்வு பெறலாம். பணம் கிடைக்கலாம். உங்கள் நிதி நிலை மேம்படும், இதிலிருந்து நீங்கள் பெரும் நிவாரணம் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். எதிரிகளின் திட்டங்கள் தோல்வியடையும். கெட்ட சகவாசம் மற்றும் பழக்கவழக்கங்களில் இருந்து விலகி இருந்தால், இந்த நேரம் பல நன்மைகளைத் தரும்.

மேலும் படிக்க | Venus Transit: மிதுன ராசிக்கு பெயரும் சுக்கிரன்! வாழ்க்கையை வளமாக்க பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News