குரு பூர்ணிமா... அபூர்வ யோகங்களும்... பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்..!!

குரு பூர்ணிமா நன்னாளில் சர்வார்த்த சித்தி யோகமும், உத்தராஷாட நட்சத்திரமும் கூடு வரும் நிலையில், இதனுடன் ப்ரீத்தி யோகம், சுக்ராதித்ய யோகம், ஷஷ ராஜயோகம், விஷ்கும்ப யோகம், குபேர ராஜயோகம், ஷடாஷ்டக யோகம் ஆகியவையும் உருவாகின்றன. இது மிகவும் அரிய சேர்கை என ஆன்மீக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2024, 06:45 PM IST
  • பூர்ணிமா நாளில் உண்டாகும் 8 அற்புத சேர்க்கை.
  • மனதில் சில மாற்றங்கள் ஏற்படும்.
  • வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
குரு பூர்ணிமா... அபூர்வ யோகங்களும்... பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்..!! title=

குரு பூர்ணிமா 2024: குருவின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் உணர்த்த ஒவ்வொரு ஆண்டும், குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. ஆஷாட மாத பௌர்ணமி நாளை வியாச பூர்ணிமா என்றும் கூறுவார்கள். முறை ஆஷாட மாதத்தின் பௌர்ணமி தினமான ஜூலை 21 அன்று, ஒன்றல்ல இரண்டல்ல, 8 அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. இந்த முறை குரு பூர்ணிமா நாளில் உண்டாகும் 8 அற்புத சேர்க்கைகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

குரு பூர்ணிமா நன்னாளில் சர்வார்த்த சித்தி யோகமும், உத்தராஷாட நட்சத்திரமும் கூடி வரும் நிலையில், இதனுடன் ப்ரீத்தி யோகம், சுக்ராதித்ய யோகம், ஷஷ ராஜயோகம், விஷ்கும்ப யோகம், குபேர ராஜயோகம், ஷடாஷ்டக யோகம் ஆகியவையும் உருவாகின்றன. இது மிகவும் அரிய சேர்கை என ஆன்மீக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வரும் நாட்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். அனைத்து வேலையிலும் உங்கள் சக ஊழியர்களின் உதவியையும் ஆதரவைப் பெறுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரகளுக்கு குருவின் அருளால் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் தொழிலதிபர்கள் நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். நிலம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக நிலைமை மாறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உயர் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். 

மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் குடும்பத்தில் குரு மற்றும் தெய்வத்தின் அருளால் மகிழ்ச்சி நிலவும். பொழுதுபோக்கு தொடர்பான துறையில் பணிபுரிபவர்கள் விரும்பிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் வரும் நாட்களில் தங்கள் துறையில் மகத்தான வெற்றியைப் பெறலாம். வருமான வாய்ப்புகள் மேம்படும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை மன மகிழ்ச்சியை தரும். 

தனுசு

தனுசு ராசிக்காரகள் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை காண்பார்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் திடீர் நிதி ஆதாயத்தைப் பெறலாம். இதன் காரணமாக கடனை எளிதாக திருப்பிச் செலுத்த இயலும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் குருவின் அருளால், மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பண வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். அதே நேரத்தில், திருமணமாகாதவர்களுக்கு, திருமணம் கை கூடும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். எனவே, இந்த நேரத்தில் தொழிலதிபர்கள் தேவையில்லாமல் அதிகம் கவலைப்பட வேண்டாம். புதிய திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவேறும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News