புதன் வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் வெற்றி, புகழின் உச்சம் தொடுவார்கள்.. மகிழ்ச்சி பெருகும்

Budhan Vakra Nivarthi: மேஷம், மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தியால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2023, 09:38 AM IST
  • புதனின் வக்ர நிவர்த்தி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியைத் தரும்.
  • மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வச் செழிப்பும் ஏற்படும்.
  • அலுவலகத்தில் சிறப்பான பணிச்சூழல் அமையும்.
புதன் வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் வெற்றி, புகழின் உச்சம் தொடுவார்கள்.. மகிழ்ச்சி பெருகும் title=

புதன் வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: செப்டம்பர் 16 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில், புதன் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறார். ஒரு நபரின் ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபரின் வருமானம் அதிகரித்து பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் அந்த நபர் அனைத்து இன்பங்களையும் பெறுவார். அதே நேரம் ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகம் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் தேவை இல்லாத பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார். 

தற்போது, புதன் வக்ர நிலையில் உள்ளார். இன்னும் மூன்று நாட்களில் அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், மேஷம், மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமாக கருதப்படுகின்றது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறுவதோடு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்பும் அமைதியும் பெறுவார்கள். புதனின் வக்ர நிவர்த்தியால் மிகுதியான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதனின் வக்ர நிவர்த்தி இந்த ராசிகளுக்கு பல வித நற்பலன்களை அள்ளித்தரும்

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் புதனின் வக்ர நிவர்த்தியால் அதிக பலன் அடைவார்கள். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். உங்கள் தொழிலில் பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த வாய்ப்புகளை கண்டிப்பாக நீங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் சிரமப்படுபவர்களுக்கு இப்போது இன்னல்கள் தீர்ந்து பாதை எளிதாகும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல இணக்கம் ஏற்படும். நிதி ஆதாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மிதுன ராசி

மிதுனத்தில் புதன் உச்சம் பெற்றிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி பண விஷயத்தில் பெரும் பலன்களை அளிக்கும். லாட்டரி, பங்குச்சந்தை போன்றவற்றில் அதிக லாபம் காணலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இது உங்களின் தடைப்பட்ட பணம் அல்லது உங்கள் முந்தைய முதலீட்டின் வருவாயாக இருக்கலாம். இதனால் பொருளாதார ரீதியாக நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். புதனின் இந்த மாற்றம் மாணவர்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும் என கருதப்படுகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான சலுகைகள் கிடைக்கும். எந்த வேலையிலும் அவசரப்பட வேண்டாம், சரியான வாய்ப்பை வீணாக்காமல் பயன்படுத்திக்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க | நீதிபதியாக தீர்ப்பு தந்தாலும், சனீஸ்வரருக்கு புடிச்ச ராசிகள் 3 மட்டுமே! உங்கள் ராசி எது?

சிம்ம ராசி

புதனின் வக்ர நிவர்த்தி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியைத் தரும். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வச் செழிப்பும் ஏற்படும். அலுவலகத்தில் சிறப்பான பணிச்சூழல் அமையும், புதிய வேலை தேடுபவர்களின் தேடல் நிறைவேறும். சமூகத்தில் சிம்ம ராசிக்காரர்களின் நற்பெயர் உயரும், மக்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்துவார்கள். உங்கள் பணி நேர்த்தியால் உங்களுக்கு பாராட்டு மழை பொழியும். புதிய வணிகத் திட்டங்களை உருவாக்கி அதில் வெற்றி பெறுவீர்கள். இதன் மூலம், பணியிடத்தில் உங்கள் எதிரிகளுக்கு கடும் போட்டியை கொடுக்க முடியும். முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

துலா ராசி

புதனின் வக்ர நிவர்த்தி துலா ராசிக்காரர்களுக்கு பல வித நற்பலன்களை அள்ளித்தரும். நீண்ட நாட்களாக வேலை மாற்றம் பற்றி  நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், இப்போது அது வெற்றிகரமாக நடக்கும். வணிகத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள், குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் அதிகரிக்கும். உங்கள் தொழில் வெற்றியடைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு பயனுள்ள அறிவுறைகளை வழங்குவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உங்கள் உறவுகளும் சுமுகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை உருவாக்கி ஆதாயம் அடைவீர்கள், உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும்.

(பொருப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News