மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!

Pitru Paksha 2024 : குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2024, 08:55 AM IST
  • குரோதி ஆண்டு மஹாளய பித்ரு பட்சம்
  • செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை பித்ரு பட்சம்
  • நீத்தார் கடன் செய்யும் நாட்கள்
மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்! title=

Do Duty To Ancestors : மஹாளய பட்சம் ஆண்டுக்கு 14 நாட்கள் அனுசரிக்கப்படும் மூத்தோர்களுக்கான கடமைகளை செய்யும் நாளாகும். ஏன் இந்த 14 நாட்கள்ளுக்குள் அப்படி என்னதான் சிறப்புகள் அடங்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் துவங்கி, அடுத்து வரும் 14 நாட்களும் மஹாளயபட்சம் என ஆழைக்கப்படுகிறது.

இந்த 14 நாட்களுக்குப் பிறகு வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று கூறப்படுகிறது. பித்ரு வழிபாடு, தர்ப்பணம் கொடுக்க வேண்டிய அமாவாசை நாளான மகாளய அமாவாசையின் சிறப்புகளைத் தெரிந்துக் கொள்வோம். 

கருட புராணத்தின்படி, மகாளய பட்சத்தின்போது பித்ரு லோகத்தில் இருக்கும் மூதாதையர்களுக்கு பூவுலகம் செல்ல 
எமதர்மன் அனுமதி கொடுப்பார். அப்போது, அவர்கள், சூரிய பகவானின் ஒளிக் கதிர்கள் மூலம், சூட்சம ரூபத்தில் வந்து, நாம் செய்யும் மரியாதையை ஏற்று, ஆசி கூறுவார்கள். இந்த மகத்தான காலமான மகாளய பட்சத்தில் மூத்தோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவிர்க்கக்கூடாது என்று கருட புராணம் கூறுகிறது. 

மேலும் படிக்க | வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?

 

மகாளயபட்சத்தின் 15 நாட்களும் எந்த சுபகாரியமும் செய்வதை தவிர்ப்பது நல்லது. நமக்கு ஏதாவது தீராத பிரச்சனைகள் இருந்து வந்தால், வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வந்தால், அதற்கு காரணம், மூத்தோர்களுக்கான கடமைகளை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால் நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யவில்லை என்றால், பித்ரு தோஷம் ஏற்பட்டு, பித்ரு சாபம் ஏற்பட்டு, துன்பங்களும் காரியத்தடைகளும் ஏற்படும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை ஆகும். 

அதுமட்டுமல்ல, பித்ரு சாபம் என்பது, நம்மோடு நின்று விடாமல், நமக்கு அடுத்த பரம்பரைக்கே தொடர்ந்து வரும் என்றும் கூறப்படுகிறது. பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி இருந்தால் இந்த மஹாளய பட்சத்தில் சரி செய்து விட முடியும். என்பது நம்பிக்கை. மஹாளய பட்சத்தில் செய்யும் பித்ரு பூஜை மற்றும் அன்னதானங்கள், வேள்வி செய்த பலனை தரும் என்றும், இந்த மஹாளய பட்சத்தில் நாம் செய்யும் அறச் செயல்களை நம்முடைய முன்னோர்கள் பார்த்து நமது குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள்.

மேலும் படிக்க | எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!

வைதீக நம்பிக்கை உடையவர்கள் இந்த மஹாளய பட்சத்தில் 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த காலகட்டத்தில் கொடுக்கும் அன்னதானமானது வழக்கத்தை செய்யும் தானத்தை விட பல மடங்கு சிறந்த பலன்களைக் கொடுக்கும். முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுப்பது,  மஹாளய அமாவாசை அன்று தர்பணம் மற்றும் அன்னதானம் கொடுப்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவர், தனது பெற்றோருக்கு தர்பணம் கொடுக்கும்போது நம்முடைய தலைமுறையில் இருந்து மூன்று தலைமுறையினருக்கு மட்டுமே எள்ளும் தண்ணீரும் கொடுக்கப்படும். ஆனால் மஹாளய பட்சத்தில் நாம் கொடுக்கக்கூடிய தர்பணம், பல தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களுக்கும் போய் சேரும் என்பது நம்பிக்கையாகும். இந்த குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்

உதாரணமாக நமது குடும்பத்தில் உள்ள உடன் பங்காளிகளில் யாருக்காவது ஆண் வாரிசு இல்லாமல் போயிருந்தால், அவருக்கு ஆண்டுதோறும் திதி கொடுக்க முடியாமல் நின்று போயிருக்கும். மஹாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்பணம், தானத்தினால், அண்ணா, தம்பி, சகோதரிகள், அண்ணி, அத்தை, மாமா, மாமனார், மாமியார், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, நண்பர்கள், குரு மற்றும்  உங்கள் வம்சத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும்

இந்த மஹாளய பட்சத்தில் செய்யும் தர்ப்பணம், மற்றும் அன்னதானம் நமக்கு அடுத்து வரக்கூடிய 21 தலைமுறைக்கும் சென்று சேரும். உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறையை சீரும் சிறப்பாக வாழ வைக்கும் இந்த மஹாளய பட்சத்தில் செய்யும் தானங்கள் உதவும். நம் தலைமுறை செழிப்பாக வளர, முன்னோர்களின் மனநிறைவான ஆசீர்வாதம் தேவை என்று சாத்திரங்கள் சொல்கின்றன.

மேலும் படிக்க | கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே உங்களை கோடீஸ்வரராக்கும்! எப்படி? இப்படித்தான்... 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News