4 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... பண வரவு அதிகமாகும்

Budhan Peyarchi Palangal: கடக ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2024, 12:42 PM IST
  • மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுபமானதாக இருக்கும்.
  • புதனின் அருளால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
  • வாழ்க்கை துணையுடனான அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
4 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... பண வரவு அதிகமாகும் title=

Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது எல்லாம் அந்த கிரகத்தின் அம்சங்களில் மனித வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பேச்சாற்றல், பண வரவு, பங்குச்சந்தை, வங்கித் துறை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். இதன் காரணமாக எப்போதெல்லாம் புதன் பெயர்ச்சி ஏற்படுகின்றதோ இந்த துறைகளில் சிறப்பம்சம் வாய்ந்த தாக்கங்கள் காணப்படும். ஜூன் 29 அன்று கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.

கடக ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.

கன்னி (Virgo)

புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால் மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் உங்கள் நிதிநிலை மேம்படும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாத வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை நன்றாக மேம்படும். முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சூரியனை எப்படி வணங்கினால் அருளாசி பெறலாம்? பவிஷ்ய புராணம் சொல்லும் சூரிய வழிபாடு!

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுபமானதாக இருக்கும். புதனின் அருளால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வாழ்க்கை துணையுடனான அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் வாழ்க்கையும் மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் இப்பொழுது முடிவடையும். பணியிடத்தில் மிகவும் விவேகத்துடனும் பொறுமையுடனும் உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள். 

துலாம் (Libra)

புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். இந்த காலம் சுபமான ஒரு காலமாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் அதிகப்படியான முன்னேற்றம் காண்பீர்கள். இதனுடன் நீங்கள் தொடங்கும் புதிய வேலைக்கான நேரம் உங்களுக்கு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். வியாபாரிகள் அதிக லாபம் காண்பார்கள். உங்கள் தந்தையுடனான நான் உறவு மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News