அக்டோபர் 23 ஆம் தேதி நீதிக்கடவுளான சனி பகவானின் மிகப்பெரிய மாற்றம் நிகழவுள்ளது. சனீஸ்வரன் தற்போது வக்ர நிலையில், அதாவது இயல்பான இயக்கத்துகு எதிர் இயக்கத்தில் இருக்கிறார். 23 ஆம் தேதி, இந்த நிலை மாறி, சனி தனது வழக்கமான இயக்கத்துக்கு திரும்புவார். சனியின் நிலை மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டு வரும். தனது சொந்த ராசியான மகர ராசியில் கடைசி கட்டத்தில் சஞ்சரிக்கும் சனி இப்போது அக்டோபர் முதல் ஜனவரி 2023 வரை ரிஷபம் உட்பட பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித சங்கடங்களை ஏற்படுத்துவார். சனி பகவானின் நிலை மாற்றம் எந்தெந்த ராசிகளில் பிரச்சனைகளை உருவாக்கும் என இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்
சனியின் மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல சிரமங்களைக் கொண்டுவரப் போகிறது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படக்கூடும். இது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில், செலவுகள் அதிகமாக இருக்கும். அதே சமயம் லாபமும் குறைவாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளும் நிதி பிரச்சனைகளும் உங்களை பாடாய் படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் மாற்றம் பல பிரச்சனைகளைத் தரப் போகிறது. இந்த நேரத்தில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்கள் வணிக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். திருமண வாழ்வில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண இழப்பையும் சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பது நல்லது.
கன்னி
சனி பகவானின் நிலை மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உண்டாக்கப் போகிறது. நீங்கள் திட்டமிட்டிருந்த வேலைகள் நடக்காமல் போகலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் நலனின் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஏற்கனவே ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள். தற்போது சனி பகவான் மகரத்திலேயே இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த நேரத்தில் உங்கள் மனக் கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வரும். இதனுடன் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். வாழ்வில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனியின் மாற்றத்தால் அதிகம் அலைச்சலை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த நேரத்தில் உங்கள் பணச் செலவு அதிகமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியமும் சிக்கல்களை எதிர்கொள்ளும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த நேரத்தில் உங்கள் வெளிநாட்டு பயண திட்டங்கள் நிறைவேறும். ஆனால், இதனால் செலவும் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனிதசையால் சிக்கித்தவிக்கும் ராசிகள்: இந்த பரிகாரங்களால் பலன் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ