புத்தாண்டு ராசிபலன்: 6 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி, பண மழையில் நனைவார்கள்

New Year Horoscope: சில குறிப்பிட்ட ராசிகளுக்கு 2023-ம் ஆண்டில் வியாபாரம் மற்றும் வருமானம் அமோகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2022, 11:31 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டின் தொடக்கம் வியாபார ரீதியாக லாபகரமாக இருக்கும்.
  • ஆண்டின் நடுப்பகுதியில், நீங்கள் வியாபாரத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.
  • இருப்பினும், ஆண்டின் இறுதியில் நிலைமை மேம்படும்.
புத்தாண்டு ராசிபலன்: 6 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி, பண மழையில் நனைவார்கள்

புத்தாண்டு ராசிபலன்: இன்னும் சில நாட்களில் 2023 புத்தாண்டு பிறக்கவுள்ளது. அனைவரிடமும் இந்த ஆண்டுக்கான பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது. இந்த பதிவில், பண வரவு, நிதிநிலை, வேலை, வணிகம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். 2023 ஆம் ஆண்டில், சுக்கிரன், புதன் மற்றும் சனி உள்ளிட்ட பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றவுள்ளன. சனி மகர ராசியிலிருந்து ஜனவரி மாதமே கும்ப ராசிக்குள் நுழைவார். கிரக ராசி மாற்றங்களின் தாக்கம் அனைவரது தொழில் மற்றும் வியாபாரத்திலும் தெரியும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு 2023-ம் ஆண்டில் வியாபாரம் மற்றும் வருமானம் அமோகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

2023 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு வியாபார ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சனியின் ராசி மாறுவதால் உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடனான உங்கள் தொடர்பு இந்த ஆண்டு உங்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும். வேலையில் பிஸியாக இருப்பதால், உங்கள் குடும்பத்திற்கு குறைந்த நேரத்தையே கொடுக்க முடியும். ஆனால், வியாபார விருத்தியின் பலனை குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்து ஆனந்தம் அடைவார்கள். ஆண்டின் நடுப்பகுதியில் ​​வியாபாரத்தில் செழிப்பு அதிகரிக்கும். இருப்பினும், ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் வேலையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2023 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனியின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் ஏற்ற, இறக்கத்தைத் தரும். சனியின் ராசி மாற்றம் உங்களின் தொழிலில் ஏற்ற, இறக்கத்தைத் தரும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் ஆதாயமடைவீர்கள். சனி பகவானின் அருளால் உங்கள் வணிகம் மிகவும் அதிகரிக்கும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், நீங்கள் வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்தால், அது உங்களுக்கு நன்மை பயக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, உங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

மேலும் படிக்க | சிம்ம ராசிக்கான 2023 வருட பலன்: ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை! 

2023 புத்தாண்டு ராசிபலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்

கன்னி ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டின் தொடக்கம் வியாபார ரீதியாக லாபகரமாக இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில், நீங்கள் வியாபாரத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஆண்டின் இறுதியில் நிலைமை மேம்படும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு வெளிநாட்டு தொழிலதிபர்களின் வியாபாரம் அதிகரித்து உங்களின் வேலையில் செழிப்பு காணப்படும்.

2023 புத்தாண்டு ராசிபலன்: தனுசு ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு வணிக ரீதியாக வெற்றிகரமாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உங்கள் வியாபாரம் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு வியாபாரத்தில் வெற்றியும் செழிப்பும் கிடைக்கும். இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நீங்கள் வியாபாரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம், டிசம்பர் மாதத்தில், வெளி நாட்டு பிரமுகர்களுடன் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வியாபாரம் செய்யலாம், நல்ல லாபம் காணலாம்.

2023 புத்தாண்டு ராசிபலன்: மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

2023 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். இருப்பினும், மே முதல் ஜூலை வரை நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தவிர, இந்த ஆண்டு உங்களுக்கு செழிப்பையும் வியாபாரத்தில் வெற்றியையும் தரும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், உங்கள் தொழிலை விரிவுபடுத்த பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2023 புத்தாண்டு ராசிபலன்: கும்ப ராசிக்காரர்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு தொழில் ரீதியாக உங்கள் கடின உழைப்பின் பலனைத் தரும். இந்த வருடம் உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும், வியாபாரத்தில் செழிப்பு இருக்கும். இது மட்டுமின்றி, இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் சில புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எது உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் சில நல்ல நண்பர்கள் / உறவினர்களின் உதவியால் இந்த காலத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை, மகிழ்ச்சியில் திளைப்பார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News