துன்பங்கள் அனைத்தையும் போக்கும் காலபைரவரின் அருளைப் பெற.... காலாஷ்டமி வழிபாடு..!

சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவ ரூபமாகும். சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 28, 2024, 12:04 PM IST
  • காசியின் காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன.
  • காலாஷ்டமி விரதத்தைக் கடைப்பிடித்து வழிபட்டால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
  • காலாஷ்டமி விரதம் அணுஷ்டிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
துன்பங்கள் அனைத்தையும் போக்கும் காலபைரவரின் அருளைப் பெற.... காலாஷ்டமி வழிபாடு..! title=

சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவ ரூபமாகும். சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படும் பைரவர், பக்தர்கள் விரும்பும் வரத்தை அருள்பவர். நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும் கால பைரவரிடம் சரணடைந்தால் நிச்சயம் கரை சேர்ப்பார். தீராத கடன், குடும்ப பிரச்னை, குழந்தை பேறு இல்லாத நிலை, நீதிமன்ற வழக்குள் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிப்பவர் கால பைரவ மூர்த்தி. 

காசியின் காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த கால பைரவரை வழிபட கால அஷ்டமி சிறந்த நாளாகும். சிவபெருமானின் உக்கிரமான வடிவமான கால பைரவரை, ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் காலஷ்டமி விரதத்தைக் கடைப்பிடித்து வழிபட்டால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் (Astro Remedies)  நீங்கும். 

காலஷ்டமி அன்று சிவபெருமானின் கால பைரவ ரூபத்தை வழிபடுவதால், பக்தர்களின் மனதில் இருக்கும் அனைத்து விதமான அச்சங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி மே 30 வியாழன் அன்று வரும் நிலையில், இந்த நாளில் காலாஷ்டமி விரதம் அணுஷ்டிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

காலஷ்டமி நாளில், சிவனின் உக்கிர வடிவான காலபைரவரை பைரவரை வணங்கி விரதம் இருப்பதன் மூலம், வாழ்க்கையில் அனைத்து விதமான துக்கத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம். இந்த நாளில், சிவபெருமானின் அவதாரமான கால பைரவர் அருளால் உங்கள் நோய்கள், தொல்லைகள் மற்றும் தடைகள் அனைத்தும் நீங்கும்.

மேலும் படிக்க | ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

காலாஷ்டமி நாளில் நீங்கள் கால பைரவரை வழிபடும் போது அவருக்கு பிரசாதமாக சில குறிப்பிட்ட பொருட்களை சேர்ப்பதன் மூலம், உங்களது அனைத்து விருப்பங்களும் நிறைவேறி,  வேண்டிய வரம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.

கால பைரவருக்கு அர்ப்பணிக்கக் கூடிய சிறந்த பொருட்கள்

கலாஷ்டமி நாளில், கால பைரவருக்கு, உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அல்வா, பாயசம், இனிப்பு புட்டு, ஜாங்கிரி, பழங்கள் போன்றவற்றை பிரசாதமாக சமர்பிக்கலாம்.

கால பைரவருக்கு அளிக்கப்படும் பிரசாதம் சுத்தமான நெய்யில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

கால பைரவரை வழிபட, தூபம், தீபம் மற்றும் கற்பூரம் ஏற்றி, கால பைரவருக்கான ஸ்தோத்திரம் மற்றும் ஆரத்தி பாடல்களை பாடி வழிபடலாம்.

கால பைரவர் மனம் குளிர ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வது சிறப்பு.

கலாஷ்டமியின் முக்கியத்துவம்

கால அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபடுவதன் மூலம், பக்தர்கள் செல்வ செழிப்பை அடைவார்கள். எதிரிகளை வெற்றி கொள்வார்கள். நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். மனதில் இருக்கும் பயம், கவலை நீங்கும். அதுமட்டுமின்றி வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கால பைரவரை வழிபடுவதன் மூலம் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ரிஷபத்தில் சதுர்கிரஹி யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News