Weekly Horoscope (Sep 5 - 11): ‘இந்த’ ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

Weekly Horoscope: தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 5 முதல் தொடங்கும் வாரத்தில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகளின் வார பலன்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 4, 2022, 01:40 PM IST
  • வாரத் தொடக்கத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.
  • சிறு விஷயங்களில் ஈகோ மற்றும் கோபத்தை நடுவில் கொண்டு வரக்கூடாது.
  • கோபம் மனசாட்சியை அழிக்கிறது. நிகழ்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
Weekly Horoscope (Sep 5 - 11): ‘இந்த’ ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! title=

Weekly Horoscope: தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 5 முதல் தொடங்கும் வாரத்தில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகளின் வார பலன்களை அறிந்து கொள்ளலாம்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும்.  இல்லையெனில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தொழிலதிபர்கள் இங்கே புதிய கூட்டாளர்களை பெறலாம். ஆனால் இப்போது முதலீடு செய்ய வேண்டியதில்லை. இந்த நேரம் முதலீடு செய்வதற்கு ஏற்றது அல்ல. இந்த வாரம் இளைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். தீவிரமான பேச்சு மக்களை ஈர்க்கும். தீ விபத்து தடுப்பு விதிகள் அனைத்தையும் வீட்டில் கடைபிடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகன விபத்துகள் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வாகனம் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். இதனுடன், வீட்டின் வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் - இந்த ராசிக்காரர்களுக்குப் பொறுப்புச் சுமையும், சோம்பலும் இருப்பதால், வேலைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கலாம். திட்டமிட்டுச் செயல்படவும். வியாபாரிகள் வார இறுதியில் நல்ல லாபத்தை பெறுவார்கள். வாடிக்கையாளர்களிடம் எப்போதும் அன்புடன் பேசுங்கள். போதையில் இருக்கும் நண்பர்களிடம் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும். அவர்களின் நட்பு உங்களை பெரிதும் பாதிக்கலாம். குடும்பத்தில் ஒருவரின் திருமணம் நடைபெறலாம். நிதி ரீதியாக ஒத்துழைக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீண்ட காலம் நோயினால், அவதிப்படுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாரத் தொடக்கத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருந்தாலும் இறுதிவரை பணத்தை முதலீடு செய்யும் திட்டம் இருக்கும்.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனையும் வாய்ப்பு கிடைக்கும், இதன் காரணமாக  வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும், பதவி உயர்வும் கிடைக்கலாம். பூர்வீக வியாபாரத்தில் டென்ஷன் இருக்கும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். தந்தையின் பணத்தை தொழிலுக்கு பயன்படுத்த வேண்டாம், பிரச்சனை வரலாம். இளைஞர்களின் சகவாசத்தின் தாக்கம் அவர்களின் வேலையை பாதிக்கும் என்பதால், கவனமாக  இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும், வாரத்தின் நடுப்பகுதியில் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அரசுப் பணிகள் எளிதாக நடைபெறும். அரசுத் துறைகளில் இருந்த தடைகள் நீங்கும்.

கடகம் - இந்த ராசிக்காரர்கள் செப்டம்பர் 9 முதல் தங்கள் வேலையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள், இந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. தானிய வியாபாரிகள் இந்த வாரம் தங்கள் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும், பெரிய ஒப்பந்தங்கள் சாத்தியமாகும். சிறு விஷயங்களில் ஈகோ மற்றும் கோபத்தை நடுவில் கொண்டு வரக்கூடாது. கோபம் மனசாட்சியை அழிக்கிறது. நிகழ்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். உடலில் கால்சியம் குறைபாடு அல்லது அதிகப்படியான தலைவலி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் அலுவலக பணிக் குழுவில் உள்ள துணை அதிகாரிகள் உங்கள் மீது பொறாமை பட்டு சில செயல்களை புரியலாம். ஆனால் நீங்கள் எதிர்வினையாற்ற வேண்டியதில்லை.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களின் உத்தியோகத்தில் சூழ்நிலை சற்று கடினமாக இருந்தாலும், பணியில் மூத்தவர்களின் உதவியினால் இலக்கை அடைவீர்கள். பெரிய தொழில் சம்பந்தமான விஷயங்களில் விழிப்புடன் இருங்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம் என எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள், இன்றைய வேலையை இன்றே செய்வது நல்லது. பத்திரிக்கையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். செய்தித்தாள், பத்திரிகை அல்லது டிஜிட்டல் தளத்தில் வேலை கிடைக்கலாம்.  வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குங்கள். மார்பில் எரிச்சல் தன்மை மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை இருக்கலாம்.  நிறைய தண்ணீர் குடிக்கவும். உங்கள் சக ஊழியர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.  அவர்களும் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

கன்னி- இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் கடின உழைப்புடன்  செயல்பட வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். இரும்பு சம்பந்தமான வியாபாரம் செய்பவர்கள் இம்முறை அதிக லாபம் ஈட்டக்கூடிய நிலை ஏற்படும். எனினும், வியாபாரத்தை சிறிது சீரமைக்க வேண்டியிருக்கும். இளைஞர்கள் சோம்பேறித்தனத்தை விட்டு விலக வேண்டும், அப்போதுதான் வெற்றியை நோக்கி நடக்க முடியும். இந்த நேரத்தில் நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் பிரிவினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அமைதி காப்பதே சிறந்த தீர்வாக அமையும். கண்களில் எரிச்சல் மற்றும் வலி இருக்கும். சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கண்களை பரிசோதிப்பது நலல்து. முதலீட்டுக்கு சரியான நேரம் இது. எதிர்காலத் திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு சில முதலீடுகளைச் செய்யலாம்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News