இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாள் 1983 ஜூன் 25

கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற சாதனை வெற்றியின் சரித்திரம் 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 25, 2020, 11:09 PM IST
  • 1975ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை போட்டி தொடங்கப்பட்டது
  • இரு முறை கிரிக்கெட் உலகக்கோப்பபியை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது
  • 1983ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது
  • கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கபப்டும் லண்டன் லார்ட்ஸ் மைதானம் 1814ம் ஆண்டு கட்டப்பட்டது
  • 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இரண்டாவது முறை உலகக்கோப்பையை வென்றது
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாள் 1983 ஜூன் 25

இந்தியா: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாள் 1983 ஜூன் 25. அன்றுதான் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  

1814ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் போற்றப்படுகிறது. அதிலும் இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை வென்ற இடம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியா விளையாட்டுத் துறையில் உத்வேகத்துடன் முன்னேறுவதற்கு இந்த உலகக்கோப்பை வெற்றியானது உந்துதலாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கபில்தேவ் தலைமையில் சுனில் கவாஸ்கர், ஸ்ரீநாத், மொகிந்தர் அமர்நாத், யஷ்பால் ஷர்மா, கீர்த்தி ஆஸாத், ரோஜர் பபின்னி, எஸ்.எம். பாட்டில், ஷயத் கிர்மானி, மதன்லால், பல்விந்தர் சந்து என பல பிரபல வீரர்கள் உலகக்கோப்பை போட்டித் தொடரில் களமிறங்கியிருந்தனர். இந்த பலம் வாய்ந்த இந்திய அணி 43 ரன்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை பரிசளித்தார்கள்.

ALSO READ | சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்திய ராஜீவ் காந்தி

முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975ஆம் ஆண்டு துவங்கியது. அந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன.  எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடும் இந்திய அணி வெற்றி பெறும் என்று பெருமளவிலான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால், பரவலான நம்பிக்கையை தோற்கடித்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற இந்தியாவை உலகமே வியந்து பாராட்டியது. 

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.  மட்டை வீச களம் இறங்கிய இந்திய அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸின் ராபர்ஸ் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ | இங்கிலாந்தின் கால்பந்து மைதானத்தில் 'ஒசாமா பின்லேடன்’?

மேற்கிந்திய அணி களம் இறங்கியபோது வெற்றிக்கான இலக்கும் எளிதாகவே இருந்தது. எனவே, அவர்களே வெற்றி பெறுவார்கள் என போட்டியின் போக்கை முன்னதாக கணித்தார்கள் விமர்சர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும். ஆனால், அன்று மாறியது கணிப்புகள் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகின் சரித்திரமும் இந்தியாவை நோக்கி திரும்பியது.

புயலாக மாறி பந்து வீசிய இந்திய பந்து வீச்சாளர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் தலை குனிந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்கள். 

இந்திய அணியின் அமர்நாத் மற்றும் மதன்லால் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  மூன்று விக்கெட்டுகளை எடுத்து 26 ரன்களை விளாசியிருந்த அமர்நாத் ஆட்டநாயகனாக கெளரவிக்கப்பட்டார்.

ALSO READ | பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?

1983ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 28 ஆண்டுகள் கழித்து, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தாலும், முதல் வெற்றி என்றும் போற்றுதலுக்கு உரியது. 

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கோப்பையை ஏந்தியவாறு கபில் தேவ் நின்ற தோரணையை யாராலும் மறக்க முடியாது.

More Stories

Trending News