20:33 04-06-2019
இன்று நடைபெற்று வரும் போட்டியில் 33 ஓவர்களில் இலங்கை 182 ஓட்டங்கள் எடுத்த போது மழை பெய்தததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பின்பு ஆட்டம் தொடர்ந்து ஆடப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக கால தாமதம் ஏற்பட்டத்தால், இரண்டு தரப்பும் 50 ஓவரில் 41 ஓவராக குறைக்கப்பட்டது.
இந்த விதிகளின் படி, 4 பந்துவீச்சாளர்கள் 8 ஓவர்கள் பந்து வீச முடியும். 1 பவுலர் மட்டும் 9 ஓவர்கள் வீச முடியும். நபி ஏற்கனவே 9 ஓவர்கள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
14:39 04-06-2019
இன்றைய நடைபெற உள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இலங்கை பேட்டிங் செய்ய உள்ளது.
Toss news from Cardiff!
Gulbadin Naib wins the toss and Afghanistan are having a bowl first. #AFGvSL LIVE https://t.co/tJgUF1NEFG pic.twitter.com/n0zTvH61g8
— Cricket World Cup (@cricketworldcup) June 4, 2019
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 7-வது லீக் ஆட்டம் இன்று கார்டிஃப் மைதனத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ஏற்கனவே இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இரண்டு அணிகளும் இன்னும் வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்தநிலையில், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
உலகக் கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நியூஸிலாந்திடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அதேபோல ஆப்கானிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
ஆப்கானிஸ்தான் அணி இளம் வீரர்களை கொண்டது. அதிக துடிப்புடன் விளையாடக் கூடியவர்கள். அவர்களை சமாளிக்க இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் நன்றாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் வீரர்கள்: முகம்மது ஷாஜாத் (WK), குல்பாடின் நயீப் (சி), ஹஸ்ரதூல்லா ஸாஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹதி, முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், டவ்லத் ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹசன், அத்தாப் ஆலம், சாமில்லா ஷின்வாரி, அஸ்கார் ஆப்கான், நூர் அலி சத்ரான்,
இலங்கை வீரர்கள்: திமுத் கருணாரட்ன (கேட்ச்), குசால் பெரேரா (விக்கெட்), லஹிரு திமன்னன், குசன்ஸ் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, இசரு உதான, சுந்தர லக்மால், லசித் மலிங்கா, அவஷ்கா பெர்னாண்டோ, ஜெஃப்ரி வன்டர்ஸே, நுவன் பிரதீப், மிலிந்த ஸ்ரீரிவர்த்தனா.