Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா தொடர்ந்து இதில் பதக்கங்களை குவித்து வரும் நிலையில், ஆடவர் பாய்மர படகுப்பொட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற விஷ்ணு சரவணன் வெண்கலத்தை பதிவு செய்தார்.
பதக்கச் சுற்று ரத்து
திட்டமிடப்பட்ட பாய்மரப் படகுப்போட்டியின் பதக்கத்திற்கான சுற்று சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இதனால், பாய்மரப் படகுப்போட்டியில் நடைபெற்ற 11 சுற்றுகளில் வீரர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், கொரியாவின் ஹா ஜீமின் 33 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதில், விஷ்ணு சரவணன் மூன்றாமிடம் பிடித்ததில் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
அதுமட்டுமின்றி, மகளிர் பாய்மர படகுப்போட்டியின் பதக்கச் சுற்றும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியாவை சேர்ந்த நேத்ரா குமணன் நான்காவது இடம் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
BRONZE Medal For INDIA
Sailing: Vishnu Saravanan wins Bronze Medal in the Men’s ILCA 7 event.#Cheer4India #AsianGames2022 #IndiaAtAG22 pic.twitter.com/0kStnXXtKG
— Doordarshan Sports (@ddsportschannel) September 27, 2023
வேலூரில் பிறந்தவர்
பாய்மரப் படகுப்போட்டியில் வெண்கலம் வென்ற விஷ்ணு சரவணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். 24 வயதான இவர் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலும் இந்தியா சார்பில் பங்கேற்றார். குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பாய்மரப் படகுப்போட்டியின் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றிருந்தார். இது அவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.
விஷ்ணு சரவணனின் தந்தை ஒரு இராணுவ வீரர் ஆவார். அவரன் தந்தை ராமச்சந்திரன் விஷ்ணு சரவணனுக்கு இந்த பாய்மரப் படகுப்போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரின் தந்தை ஒரு முன்னாள் மாலுமி. அவர் தொழில் ரீதியாக படகோட்டுவதை தொடர முடியவில்லை. இருப்பினும், அவர் தனது இரண்டு குழந்தைகளான விஷ்ணு மற்றும் ரம்யாவிடம் அதே திறமைகளைக் கண்டார். விஷ்ணு சரவணன் அவரின் 17ஆவது வயதில் அதாவது 2015இல் மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் (MEG) பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் கேடட் ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Asian Games: பதக்கப் பட்டியல்
ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சீனா 61 தங்கம், 35 வெள்ளி, 13 வெண்கலம் என 109 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. கொரியா 15 தங்கம், 17 வெள்ளி, 22 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 9 தங்கம், தலா 21 வெள்ளி மற்றும் வெண்கலம் என 51 பதக்கங்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
ஹாங்காங், உஸ்பெகிஸ்தான் தலா 5 தங்கப்பதக்கதுடன் முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன. இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 20 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ