ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தநிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சேதுஷ்வர் புஜாரா தனது தனித்திறமை மற்றும் அற்புதமான பேட்டிங் மூலம் மீண்டும் சதம் அடித்து, இந்திய அணிக்கான தன் பங்களிப்பு சரியாக கொடுத்துள்ளார். இன்று அவர் அடுத்த சதத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 18-வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
முன்னதாக, மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா சதம் அடுத்தார். மெதுவாக விளையாடி 280 பந்துகளில் தனது 17வது சதத்தை நிறைவு செய்தார். இவரின் சதத்தால் இந்தியாவுக்கு வலுவான அஸ்திவாரமாக அமைந்தது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல புஜாராவின் சதமும் ஒரு காரணமாக அமைந்தது.
அடிலெய்டு டெஸ்டில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் புஜாரா 123 ரன்களை எடுத்து தனது 16வது சதத்தை நிறைவு செய்தார். இதன் காரணமாக அடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றியை இந்தியா பதிவு செய்தது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி நான்கு சதங்களை(2014) அடித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 1977-78 ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தில் போது மூன்று சதங்களை அடுத்துள்ளர். தற்போது சேதுஷ்வர் புஜாரா மூன்று சதங்களை அடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எப்பொழுது எல்லாம் மோசமான தொடக்கம் அமைகிறதோ, அந்த கடினமான சூழ்நிலைகளில் நிதானமாக நின்று ஆடக்கூடியவர் சேதுஷ்வர் புஜாரா. டெஸ்ட் போட்டியை பொருத்த வரை பூஜார இதுவரை 68 போட்டிகளில் விளையாடி 5361 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 18 சதமும், 20 அரை சதமும் அடங்கும். இவரின் அதிகபட்ச ரன்கள் 206* ஆகும்