ஜிம்பாப்வே அணி பங்கேற்கும் முத்தரப்பு T20I தொடர் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் ஒருநாள் டெஸ்ட் மற்றும் ஜிம்பாப்வேவையும் உள்ளடக்கிய முத்தரப்பு டி20 சர்வதேச தொடருக்கான சுற்றுப்பயண தேதிகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது!

Last Updated : Aug 8, 2019, 10:03 AM IST
ஜிம்பாப்வே அணி பங்கேற்கும் முத்தரப்பு T20I தொடர் அறிவிப்பு! title=

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் ஒருநாள் டெஸ்ட் மற்றும் ஜிம்பாப்வேவையும் உள்ளடக்கிய முத்தரப்பு டி20 சர்வதேச தொடருக்கான சுற்றுப்பயண தேதிகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது!

ICC-யால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ICC போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் ICC-ன் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக இருதரப்பு - அல்லது முத்தரப்பு - கிரிக்கெட்டை விளையாட தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் வங்கதேசம் - அப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்கான அப்கானிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வங்கதேசம் வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் அப்கானிஸ்தான், டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரண்டு நாள் பயிற்சி டெஸ்ட் போட்டியில் களந்துக்கொள்கிறது. சட்டகிராமில் உள்ள ஜாகூர் அகமது சவுத்ரி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

டி20 தொடரில் பங்கேற்க வரும் ஜிம்பாப்வே அணி, இந்த டெஸ்ட் தொடரின் போது வங்கதேசத்தை எட்டுகிறது. இம்மூன்று அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் மிர்பூரில் உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது, இரண்டாவது மூன்று ஆட்டங்கள் மீண்டும் சாட்டோகிராமில் உள்ள ஜாகூர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறுகிறது.

சுற்றுப்பயணத்தின் இறுதி மற்றும் கோப்பைக்கான ஆட்டம் செப்டம்பர் 24-ஆம் நாள் மிர்பூரில் உள்ள SBNCS-ல் நடைபெறுகிறது.

---முழு அட்டவணை---

  • ஆகஸ்ட் 30 : ஆப்கானிஸ்தான் வங்கதேசம் வருகிறது.
  • செப்டம்பர் 5-9 : சாட்டோகிராம் மைதானத்தில் அப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் பங்கேற்கும் டெஸ்ட் போட்டி.
  • செப்டம்பர் 08 : ஜிம்பாப்வே வங்கதேசம் வருகிறது.
  • செப்டம்பர் 13 : முதல் டி20 (வங்கதேசம் - ஜிம்பாப்வே), மிர்பூர் மைதானம்.
  • செப்டம்பர் 14 : இரண்டாவது டி20 (அப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே), மிர்பூர் மைதானம்.
  • செப்டம்பர் 15 : மூன்றாவது டி20 (வங்கதேசம் - அப்கானிஸ்தான்), மிர்பூர் மைதானம்.
  • செப்டம்பர் 18 : நான்காவது டி20 (வங்கதேசம் - ஜிம்பாப்வே), சாட்டோகிராம் மைதானம்.
  • செப்டம்பர் 20 : ஐந்தாவது டி20 (அப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே), சாட்டோகிராம் மைதானம்.
  • செப்டம்பர் 21 : ஆறாவது டி20 (வங்கதேசம் - அப்கானிஸ்தான்), சாட்டோகிராம் மைதானம்.
  • செப்டம்பர் 24 : இறுதி போட்டி (TBC v TBC) மீர்பூர் மைதானம்.

Trending News