நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் KKR அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டி முடிவதற்கு முன்பாக விலகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட உள்ளார். இதனால், கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் தொடருவதற்கான வாய்ப்பு குறைவு என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா அணிக்கும் பிரெண்டன் மெக்கலத்துக்கு இடையிலான உறவு மிகவும் நீண்டது. ஐபிஎல் தொடங்கியது அந்த அணியின் ஒரு அங்கமாக இருந்தார். ஐபில் போட்டி தொடங்கியதும் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய அவர், 158 ரன்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார். மேலும், கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மெக்கலாம், பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் போட்டிக்கான ரேஸில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தன்னுடைய ஒப்புதலையும் மெக்கலம் வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. அண்மையில் இங்கிலாந்து புதிய டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | மீண்டும் 'RCB'க்குத் திரும்பும் மிஸ்டர்-360? - ரகசியத்தை உடைத்தார் விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றி கூட பெறாமல் 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியில் இருந்து விலகினார். தற்காலிக பயிற்சியாளராக பால் காலிங்வுட் இருந்தார். இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முழுநேர பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றது. இதில் பிரண்டன் மெக்கலம் தேர்வாகியிருக்கிறார்.
இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 2016-ல் கிறிஸ்ட்சர்ச்சில் விளையாடினார். அந்தப் போட்டியில் 145 மற்றும் 25 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் 54 பந்துகளில் சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 101 போட்டிகளில் 6453 ரன்கள் குவித்துள்ள மெக்கலம், 12 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 302 ஆகும். இங்கிலாந்து அணி அடுத்ததாக நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டி மூலம் ரஷித்கானை தேடி வந்த கவுரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR