உலகக்கோப்பைக்கு ஜடேஜாவைவிட சஹால்தான் பொருத்தமானவர் - முன்னாள் வீரர் கருத்து

டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை ஜடேஜாவைவிட சஹால்தான் சுழற்பந்து வீச்சுக்கு பொருத்தமானவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 02:36 PM IST
  • டி20 உலகக்கோப்பை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
  • ஜடேஜாவைவிட சஹால் பொருத்தமானவர் என முன்னாள் வீரர் சோப்ரா கருத்து
  • எந்த சுழற்பந்து வீச்சாளருக்கு கல்தா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
 உலகக்கோப்பைக்கு ஜடேஜாவைவிட சஹால்தான் பொருத்தமானவர் - முன்னாள் வீரர் கருத்து title=

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதைக்கு அஷ்வின், அக்‌ஸர் படேல், ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக இருக்கின்றனர். தொடர் மற்றும் திறமையை பொறுத்து இவர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தச் சூழலில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களில் யார் யார் தேர்வாவர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஷ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சஹால், ரவி பிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டியின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும் என்பதால் தங்களை நிரூபிக்க அணி வீரர்கள் முழு முனைப்போடு இருக்கின்றனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ 20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம்பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக க்கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவரால் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Akash Chopra

ஜடேஜா மட்டுமின்றி, அக்‌ஸர் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோரும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பௌலர்களாக இல்லை. கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை அக்சர் கைப்பற்றினார். ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிகிறது. 

மேலும் படிக்க | நா திரும்பி வந்துட்டேனு சொல்லு! ஒருநாள் போட்டியில் 174 ரன்கள் குவித்து புஜாரா சாதனை!

20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களில் யசுவேந்திர சஹால்தான் ஜடேஜாவைவிட பொருத்தமானவர். அவருக்கு அடுத்தபடியாக அணிக்கு தேவையான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News