CSK vs RCB Dream 11 Playing XI: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடர் நாளை முதல் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதுவரை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் மற்ற போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிகிறது.
மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் கேப்டன்ஸியில் இருந்து விலகிய நிலையில், புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை இந்த திடீர் அறிவிப்பு வெளியாகிறது. இதன்மூலம் 2008ஆம் ஆண்டில் இருந்து தோனி கேப்டனாக இருக்கும் நிலையில் இடையில் 2022ஆம் ஆண்டில் ஜடேஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
ருதுராஜ் முன் இருக்கும் சவால்...
இருப்பினும், அந்த தொடரிலேயே மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை பெற்றுக்கொண்டார். தோனி காயமடைந்த சில காலம் ரெய்னா கேப்டன் பொறுப்பை பார்த்துள்ளார். தற்போது தோனி, ரெய்னா, ஜடேஜாவுக்கு அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் நான்காவது கேப்டனாக சிஎஸ்கேவில் பொறுப்பேற்கிறார். புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முன் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்றாலும், ஆர்சிபி உடனான முதல் போட்டி அவருக்கான முதல் பரிசோதனையாக இருக்கும் எனலாம்.
சிஎஸ்கே மட்டுமின்றி நாளை எதிர்த்து போட்டியிடும் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் குறித்தும் பலருக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தோனி Impact Player ஆக வந்து பேட்டிங் செய்வாரா அல்லது முழு போட்டியிலும் களத்தில் விளையாடுவாரா என்பதை பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி (Royal Challengers Bengaluru) அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம்.
இரு அணிகளின் பிளெயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், சிவம் தூபே, தோனி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபீஷூர் ரஹ்மான். Impact Player: சமீர் ரிஸ்வி, முகேஷ் சௌத்ரி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் பட்டிதார், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அல்ஸாரி ஜோசப், முகமது சிராஜ், கரன் சர்மா, ஆகாஷ் தீப். Impact Player: அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், விஜய்குமார் வைஷாக்
Dream 11 பிளேயிங் லெவன் பரிந்துரை
இதில் Dream 11 பிளேயிங் லெவனை அமைக்க உள்ளீர்கள் என்றால் இந்த பரிந்துரை உங்களுக்கு கைக்கொடுக்கலாம். இருப்பினும், இவை ரசிகர்களின் விருப்பமே ஆகும்.
விக்கெட் கீப்பர்: தோனி
பேட்டர்கள்: விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவிந்திரா, ரஜத் பட்டிதார்
ஆல் ரவுண்டர்கள்: கேம்ரூன் கிரீன், மேக்ஸ்வெல், ஜடேஜா
பந்துவீச்சாளர்கள்: சிராஜ், தீபக் சஹார், முஸ்தபிஷூர் ரஹ்மான்
மேலும் படிக்க | IPL 2024: தோனி சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? - காரணம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ