போட்டியில் தோற்றாலும் காதலியின் மனதை வென்ற சாஹர்? யார் அந்த மர்மப் பெண்

காதலியின் இதயத்தை மட்டுமல்லாமல், சாஹரின் செய்கை இணையம் முழுவதும் பலரது இதயத்தை கொள்ளையடித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2021, 01:45 PM IST
போட்டியில் தோற்றாலும் காதலியின் மனதை வென்ற சாஹர்? யார் அந்த மர்மப் பெண் title=

IPL 2021: நேற்று ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றது. இந்த தோல்வியால் சென்னை ரசிகர்கள் மனம் வருந்தினாலும், அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஒரு சம்பவம் நடந்தது.

சென்னை வீரர் தீபக் சாஹர் சென்னை ரசிகர்களின் முகங்களில் புன்னகை மலர காரணமானார். சென்னை பஞ்சாப் போட்டிக்குப் பிறகு, சிஎஸ்கே (CSK) சீமர், ஸ்டாண்டுகளுக்கு சென்று தனது காதலி முன் மண்டியிட்டு, அவரிடம் ஒரு அழகான மோதிரத்துடன் ப்ரபோஸ் செய்தார். இது அவரது காதலியை மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தீபக் சாஹரின் இந்த அற்புதமான செய்கை, சாஹரின் காதலியின் இதயத்தை வென்றது. காதலியின் இதயத்தை மட்டுமல்லாமல், சாஹரின் செய்கை இணையம் முழுவதும் பலரது இதயத்தை கொள்ளையடித்தது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்சும் தங்களது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தனர்.

வீடியோவைப் பகிர்ந்த CSK, அதில், "கங்கிராஜுலேஷன்ஸ் செர்ரி..! ஸ்டே மெர்ரி” என்று எழுதினர்.

ALSO READ: 2022ல் சிஎஸ்கேவில் இருப்பேனா என்பது தெரியவில்லை - எம்.எஸ். தோனி 

சாஹரின் இதயத்தை கொள்ளைக்கொண்ட அந்த மர்மப் பெண் யார்?

தீபக் சாஹரின் (Deepak Chahar) சகோதரி மாலதி இன்ஸ்டாகிராமில் அந்த பெண்ணைப் பற்றிய விவரங்களை உறுதிப்படுத்தினார். சாஹரின் காதலியின் பெயர் ஜெயா பரத்வாஜ் என்றும் அவர் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயா ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் இவர் பிக் பாஸ் புகழ் சித்தார்த் பரத்வாஜின் சகோதரி என்றும் ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 (IPL 2021) முடிந்தவுடன் தீபக் சாஹர் திருமணம் செய்து கொள்வார் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இந்திய டி 20 அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக கருதப்படும் தீபக் சாஹர், ஜூலை 2018 இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினார். அவர் இதுவரை ஐந்து ஒருநாள் மற்றும் 14 டி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: சிஎஸ்கேவில் இணைந்த மற்றோரு மேற்கிந்திய ஆல்ரவுண்டர்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News