IND vs SL: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றின் முதல் இன்னிங்ஸ் தற்போது நிறைவடைந்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மேலும், ஆடுகளம் சுழலுக்கு ஏற்றாற் போல் உள்ளதால் இந்திய அணி ஷர்துல் தாக்கூருக்கு பதில் அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி தரப்பில் முதலில் களமிறங்கிய ரோஹித் - கில் ஜோடி பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 11 ஓவர்களில் 80 ரன்களை எடுத்தது. அதன்பின் தான் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. 12ஆவது ஓவரில் 20 வயது இளம் சுழற்பந்துவீச்சாளரான தினித் வெல்லலகே தாக்குதலை தொடங்கினார். முதல் பந்திலேயே கில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரோஹித் ஒருபுறம் ஒருநாள் அரங்கில் தனது 51ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அந்த நேரத்தில் விராட் கோலி 3 ரன்களில் வெல்லலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து, ரோஹித்தும் 53 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
மேலும் படிக்க | IND vs SL: இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களை தட்டி தூக்கிய துனித் வெல்லலகே
அதன் பின் இஷான் கிஷன் - கேஎல் ராகுல் ஜோடி நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி 63 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தபோது, கேஎல் ராகுல் 39 ரன்களில் வெல்லலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவும் 5 ரன்களில் வெல்லலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். சற்று நேரத்திலேயே இஷான் கிஷனும் 33 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா பெரும் நெருக்கடிக்குள் சென்றது.
அவர்களை தொடர்ந்து, ஜடேஜா 4, பும்ரா , குல்தீப் 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் உடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் இந்திய அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு கொண்டு சென்றது. இந்த ஜோடி 27 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தீக்ஷனா வீசிய கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் அக்சர் படேல் கேட்ச் கொடுத்து வெளியேற இந்தியா 213 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் வெல்லலகே 5, அசலங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும், 21 எக்ஸ்ட்ராசும் வீசப்பட்டது.
இந்திய அணி பேட்டிங்கில் பேட்டிங்கில் சொதப்பினாலும் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு தனித்துவமான சாதனையையும் படைத்தார். அதாவது, ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதுபோன்று ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6ஆவது இந்திய வீரர், ஒட்டுமொத்தமாக 15ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ரோஹித் 10 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இரண்டாவது பேட்டர் ஆனார். சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி, பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல், எம்எஸ் தோனி மற்றும் அவரது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை இவர் முந்தினார். இலங்கை உடன் இன்று அவர் தனது 241வது ஒருநாள் இன்னிங்ஸை விளையாடி வருகிறார். அதில் ஒரு சிக்ஸரை அடித்து அவரின் 10 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டினார்.
விராட் கோலி இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை எட்டியதன் மூலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் உள்ளார், மேலும் அதில் கேப்டன் ரோஹித் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். டெண்டுல்கர், கங்குலியை ஆகியோர் இதனை 263ஆவது இன்னிங்ஸில் அடைந்தனர். பாண்டிங் இதை 266ஆவது இன்னிங்ஸிலும் மற்றும் தோனி 269ஆவது இன்னிங்ஸிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்தனர்.
10 ஆயிரம் ரன்களுக்குள் நுழைந்ததைத் தவிர, ரோஹித் ஒரு சிக்ஸரை அடித்து, ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். விராட் கோலி ஒருநாள் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 13 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ