இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடேயான இரண்டாவது டெஸ்டில் 396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது இங்கிலாந்து அணி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது பின்னர் மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி துவக்க வீரர்கள் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்த பெவுலியன் திரும்பினர். இந்திய அணி தரப்பில் கோலி 23(57) மற்றும் அஷ்வின் 29(38) மட்டுமே அதிகபடியான ரன்களை குவித்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்த., 88.1 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 137(177) ரன்கள் குவித்தார். அவருக்கு கைகொடுத்த ஜானி 93(144) ரன்களில் வெளியேறினார்.
ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று 397 ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. இந்த இலக்கின் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 289 ரன்கள் அதிகம் குவித்துள்ளது.
Hardik Pandya claims the wicket of Sam Curran and England declare on 396/7. Woakes remains unbeaten on 137*. The hosts lead India by 289 runs.#ENGvIND LIVE ➡️ https://t.co/e1I98c7CZY pic.twitter.com/gnYzBUyXVA
— ICC (@ICC) August 12, 2018
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ள இந்தியா ஆட்டத்தினை ட்ரா செய்யும் முனைப்பில் விளையாடி வருகின்றது!