Hardik Pandya Injury: ஹர்திக் பாண்டியாவுக்கும் காயம்..! சிக்கலில் இந்திய அணி

இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கான பெரிதான காயம் இல்லை என்றாலும், அவர் மீது அணி நிர்வாகம் கண் வைத்திருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 11, 2023, 03:06 PM IST
  • ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்
  • சிக்கலில் இந்திய அணி
  • அவருக்கு மாற்று வீரர் யார்?
Hardik Pandya Injury: ஹர்திக் பாண்டியாவுக்கும் காயம்..! சிக்கலில் இந்திய அணி title=

ஹர்திக் பாண்டியா காயம்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின்போதே காயமடைந்த அவர் அதிக ஓவர்களை வீசவில்லை. முன்னெச்சரிக்கையாக அவர் ஓய்வெடுக்க வைக்கப்பட்டபோதும், அந்த காயத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமாகவில்லை. ஏற்கனவே இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த சுப்மான் கில், திடீரென டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இன்னும் ஒரு சில போட்டிகள் விளையாட முடியாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சென்னையில் தங்கி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த சுப்மான் கில், இப்போது அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். அங்கும் அவர் பிசிசிஐயின் மருத்துவ கண்காணிப்பிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - இந்திய அணிக்கு ஷாக்... வீடு திரும்பும் சுப்மான் கில் - பாகிஸ்தான் போட்டிக்கும் வாய்ப்பில்லை...?

சுப்மான் கில் விளையாடுவாரா?

இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆசியகோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருந்த சுப்மான் கில் துருதிஷ்டவசமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உலக கோப்பையில் பங்கேற்க முடியாத பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் உலக கோப்பை லீக் போட்டியிலேயே இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது சிறிய அளவிலான ரத்த உறைவு இருந்துள்ளது. இதனை பிசிசிஐ மருத்துவ குழுவும் கணக்கில் வைத்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

பாண்டியாவுக்கு என்ன பிரச்சனை?

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது, " காயம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அது பயப்படும்படியானது இல்லை. சிறிய அளவிலான ரத்த உறைவு மட்டுமே. அதனால் தான் மேற்கொண்டு அதிக ஓவர்களை வீசவில்லை. உலக கோப்பை நீண்ட தொடராக நடப்பதால் முழுவதுமாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறேன். உடல்நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறேன்" என தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

ஹர்திக் பாண்டியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து 

இந்த நேரத்தில் சுப்மான் கில் காயமான தகவல் சோகத்தை கொடுத்திருந்தாலும், பேக்கப் பிளேயர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை இருந்தனர். இப்போதே அணியில் இருக்கும் முக்கியமான பிளேயர்களான ஹர்திக் பாண்டியாவுக்கே காயம் என்ற தகவல் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றான ஆல்ரவுண்டர்கள் யாரும் இல்லை என்பது தான் அந்த கவலைக்கு காரணம். இதனால் 30 -வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹர்திக் பாண்டியா உலக கோப்பை முழுவதும் காயம் ஏதும் இன்றி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் படிக்க - உலகக் கோப்பையில் விளையாடிய தந்தை - மகன்... தொட்டுத் தொடரும் பாரம்பரியம் - பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News