2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருது பட்டியல் முழு விவரம்!! #Ashwin #Virat

2017-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதன் முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 18, 2018, 02:28 PM IST
2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருது பட்டியல் முழு விவரம்!! #Ashwin #Virat title=

சர்வதேச போட்டிகளான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான(2017) ஐசிசி விருதுக்கு தகுதியான வீரர்கள் பட்டியலை கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. 

ஐசிசி விருது 2017 : டெஸ்ட் வீரருக்கான பட்டியல்:

டீன் எல்கர், டேவிட் வார்னர், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி காக் (விக்கெட்கீப்பர்), அஸ்வின், ஸ்டார்க், ரபாடா, ஜேம்ஸ் ஆண்டர்சன்..

 

 

ஐசிசி விருது 2017 : ஒருநாள் வீரருக்கான பட்டியல்:

டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), பாப்ர் அசாம், டிவில்லியர்ஸ், டி காக் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஹசன் அலி, ரஷித் கான், பும்ரா.

 

 

2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும், சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுகளோடு, ஐசிசி-யின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளுக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் பும்ராவும் இடம் பெற்றுள்ளனர். 

 

 

அதேபோல 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராத், புஜாரா மற்றும் அஸ்வின் இடம் பெற்றுள்ளனர். 

 

 

2017-ம் ஆண்டுக்கான சிறந்த செயல்திறன் ஐசிசி விருதுக்கு இந்திய வீரர் சாஹால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

2017-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் ஐசிசி விருதுக்கு பாகிஸ்தான் வீரர் ஹாசன் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

2017-ம் ஆண்டுக்கான சிறந்த அசோசியட் கிரிக்கெட் வீரர் ஐசிசி விருதுக்கு ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடுவருக்கான ஐசிசி விருது மராஸ் இராஸ்முஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

Trending News