IPL 2022: புதிய 2 IPL அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும்

மே மாதத்தில் இரண்டு புதிய அணிகளை ஏலம் எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் 2022இல் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் இடம் பெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2021, 01:26 PM IST
  • புதிய 2 IPL அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும்
  • IPL 2022 போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் இடம்பெறும்
  • பிசிசிஐ அறிவிப்பு
IPL 2022: புதிய 2 IPL அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும் title=

புதுடெல்லி: மே மாதத்தில் இரண்டு புதிய அணிகளை ஏலம் எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் 2022இல் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் இடம் பெறும்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 போட்டித்தொடரில் 10 அணிகள் இடம்பெறும். பிசிசிஐ இரண்டு புதிய அணிகளை மே மாதத்தில் ஏலம் விட முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல் நிர்வாகக் குழுவால் (IPL Governing Council) இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகளை BCCI தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட பி.சி.சி.ஐ.யின் உயர் அதிகாரிகள் சனிக்கிழமையன்று நிறைவேற்றினர்.  

Also Read | Mithali Raj 10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை   

"10 அணி ஐபிஎல் அடுத்த ஆண்டு முதல் உருவாகும், மேலும் புதிய உரிமையாளர்களின் ஏல செயல்முறை மற்றும் இறுதிப்படுத்தல் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடையும்" என்று பி.சி.சி.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
 
"அணிகள் இறுதி செய்யப்பட்டவுடன், அவை தங்கள் செயல்பாட்டுப் பணிகளைத் தொடங்கலாம், இதற்கு கணிசமான நேரம் எடுக்கும்" என்றும் தெரிகிறது. 

Also Read | Ind Vs Eng T20I: முதல் T20I தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?   

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News