பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற மறுநாள், இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. வங்காளதேசம் நெதர்லாந்தை எளிதாக தோற்கடித்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே இடையேயான ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டனர். இது இப்போது ஒரு சுவாரசியமான திருப்பத்தை எடுத்துள்ளது. டி20 உலகக் கோப்பை இந்தியாவிற்கு ஒரு அழகான தொடக்கத்தை கொடுத்துள்ளது, ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா அணி சூப்பர் 12 குழு நிலைகளில் முதலிடம் பிடித்தது.
மேலும் படிக்க | எதாச்சம் கருத்தா பேசுவோமா? வைரலாகும் கார்த்திக் - அஷ்வினின் வீடியோ!
பங்களாதேஷ் மற்றும் இந்தியா இரண்டு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன, ஆனால் சிறந்த ரன் விகிதத்துடன் குழு அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது பங்களாதேஷ். ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா தலா ஒரு புள்ளியுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைத் தொடர்ந்து உள்ளன, அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இன்னும் தங்கள் கணக்கைத் திறக்கவில்லை. எஞ்சியிருக்கும் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றால், 10 புள்ளிகளை குவித்து, குரூப் 2 இன் முதல் அணியாக அரையிறுதியில் இடம்பிடித்துவிடும். தென்னாப்பிரிக்கா அதிகபட்சமாக 9 புள்ளிகளைப் பெறலாம், அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிகபட்சமாக 8 புள்ளிகளைப் பெறலாம். எனவே தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் தோற்கடிக்க முடிந்தால், தென்.ஆப் போட்டியிலிருந்து வெளியேறலாம்.
அரையிறுதிக்கு யார் செல்வார்கள் என்பதை தீர்மானிக்க தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போட்டியும் மிக முக்கியமானதாக இருக்கும். இருப்பினும், பங்களாதேஷ், நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் முக்கியமான ஒன்றாக இருக்கும். இவர்களில் ஒரு அணி பெரிய அணியுடன் வெற்றி பெற்றால் மொத்த ஆட்டமும் மாற்றி அமையும்.
மீதமுள்ள போட்டிகள்:
- அக்டோபர் 27 - தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ், நெதர்லாந்து vs இந்தியா மற்றும் பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே
- அக்டோபர் 30 - பங்களாதேஷ் vs ஜிம்பாப்வே, நெதர்லாந்து vs பாகிஸ்தான் மற்றும் இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- நவம்பர் 2 - ஜிம்பாப்வே vs நெதர்லாந்து மற்றும் இந்தியா vs பங்களாதேஷ்நவம்பர் 3 - பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
- நவம்பர் 6 - தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து, பாகிஸ்தான் vs பங்களாதேஷ் மற்றும் இந்தியா vs ஜிம்பாப்வே
மேலும் படிக்க | IND vs PAK: கடுப்பில் திட்டிய பாண்டியா... அப்செட் ஆன ரோகித் - என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ