ICC டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய கொரோனா

ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் பட்டியலில் கோவிட் -19 ஆஸ்திரேலியாவை முதலிடத்திலும், இந்தியா 2 வது இடத்திலும் தள்ளியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2020, 12:36 AM IST
  • புள்ளிகள் அட்டவணையில் ஒன்பது அணிகளின் நிலைகளை தீர்மானிக்க விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
  • புதிய மாற்றங்களை அனில் கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி கிரிக்கெட் குழு பரிந்துரைத்தது.
  • ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன
  • 0.608 சதவீத புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது
ICC டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய கொரோனா title=

புதுடெல்லி: ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் பட்டியலில் கோவிட் -19 ஆஸ்திரேலியாவை முதலிடத்திலும், இந்தியா 2 வது இடத்திலும் தள்ளியுள்ளது.

0.608 சதவீத புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து 0.500 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 0.395 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன

கோவிட் -19 தொற்றுநோயால் பல தொடர்களை விளையாட முடியாததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வியாழக்கிழமை World Test Championship (WTC) விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதை அடுத்து, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

புள்ளிகள் அட்டவணையில் ஒன்பது அணிகளின் நிலைகளை தீர்மானிக்க விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்தியா (360 புள்ளிகள்) பெற்று ஆஸ்திரேலியாவை (296) விட 64 புள்ளிகள் (296) மற்றும் அதிக தொடர் வெற்றிகளைக் கொண்டிருந்தாலும், ஐ.சி.சி வாரியம் ஆடிய போட்டிகள் மற்றும் இழந்த போட்டிகள் கொண்டு பட்டியலை முடிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. புதிய விதிகளின்படி ஆஸ்திரேலியா 0.822 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, இந்தியா 0.750  புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.  
இந்த புதிய மாற்றங்களை அனில் கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி கிரிக்கெட் குழு பரிந்துரைத்தது.

0.608 சதவீத புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து 0.500 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 0.395 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

அடிலெய்டில் டிசம்பர் 17 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.   இந்த தொடரில் அணிகளின் வெற்றி-தோல்வி பட்டியலில் மாற்றங்களை கொண்டு வரலாம்.  

"முன்னெப்போதும் இல்லாத வகையில் கோவிட் -19 ஆல் ஏற்பட்ட இடையூறுகளினால், இன்றுவரை, நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பாதிக்கும் குறைவான அளவே விளையாடப்பட்டுள்ளது. இது போட்டி 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அணிகளின் தரப்பட்டியலை முடிவு செய்ய தற்போதைய விதிமுறைகள் பொருந்தவில்லை என்பதால், நிலைமைக்கு ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதுவே இறுதி WTC லீக் நிலைகளை தீர்மானிப்பதில் சரியாக இருக்கும் என்று ஐ.சி.சி கருதுகிறது "என்று ஐ.சி.சி வியாழக்கிழமையன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News