IND vs PAK T20 WC: இன்றைய போட்டியில் மோதல் இவர்களுக்குள் தான்... மாஸான 3 ஜோடிகள் இதோ!

India vs Pakistan Match: இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடையே கடுமையான பேட் அண்ட் பால் மோதல் இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2024, 05:06 PM IST
  • விராட் கோலி முதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஓப்பனிங்கில் வருகிறார்.
  • ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்கு முக்கிய பங்காற்றுவார்.
  • பும்ரா மீது இந்திய அணி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.
IND vs PAK T20 WC: இன்றைய போட்டியில் மோதல் இவர்களுக்குள் தான்... மாஸான 3 ஜோடிகள் இதோ! title=

India vs Pakistan Match: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டமான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய போட்டி நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நீங்கள் நேரலையில் காணலாம். 

ஓடிடியில் ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாகவும், தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நீங்கள் இன்றைய போட்டியை நேரலையில் காணலாம். இன்றைய போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதும் மவுசுதான் என்றாலும், இந்த முறை கூடுதலாக பல காரணங்கள் இருக்கின்றன. 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அந்த மிரட்டலான ஆட்டத்திற்கு டி20 தொடரில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி இதுவே ஆகும். 

இந்த 3 மோதல்கள்

அதுமட்டுமின்றி, நடப்பு தொடரில் பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியை அடைந்த நிலையில், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்கும்பட்சத்தில் அதன் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடும். குறிப்பாக, பாகிஸ்தான் தோற்றுவிட்டால் இந்தியாவும், அமெரிக்காவும் அடுத்து உள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றால் நிச்சயம் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடுவார்கள். 

எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணியும் சற்று கவனத்துடன் விளையாடும் என்றாலும் பாகிஸ்தான் அணி மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இப்படி பரபரப்பு நிறைந்த உள்ள போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடையே கடுமையான பேட் அண்ட் பால் மோதல் இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம். அதில், ஷாகின் அப்ரிடி - ரோஹித் சர்மா, முகமது அமீர் - விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா - பாபர் அசாம் ஆகிய இந்த மூன்று ஜோடிகளின் மோதலை பார்க்கவே பலரும் காத்திருக்கின்றனர் எனலாம்.

மேலும் படிக்க | கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்

ஷாகின் அப்ஃரிடி vs ரோஹித் சர்மா

இதில் ரோஹித் சர்மா எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளரிடம்சற்று திணறுவார் எனலாம். சமீப ஆண்டுகளாக இது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் என்று வரும் போது ஷாகின் அப்ரிடி இவருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய அணியின் வெற்றியை பறித்ததே ஷாகின்தான்...

2022 டி20 உலகக் கோப்பை தொடரில் ஷாகினை மிகுந்த கவனத்துடனே ரோஹித் விளையாடினார். 2023 உலகக் கோப்பை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இருப்பினும், ஷாகினும் தற்போது பல்வேறு காயங்களில் இருந்து மீண்டும் வந்துள்ளார். எனவே, பழைய படி ரோஹித்திடம் தாக்குதலை மேற்கொள்ள முடியுமா என்பதும் கேள்வியாகவே உள்ளது. ரோஹித் இந்த முறை ஷாகினுக்கு எதிராக எப்படி விளையாடப்போகிறார், ரோஹித்தின் விக்கெட்டை பறிக்க ஷாகின் என்னென்ன வியூகங்களை கைக்கொள்ளப் போகிறார் என்பது பெரும் ஆவலை தூண்டியிருக்கிறது. 

முகமது அமீர் vs விராட் கோலி

விராட் கோலி உலகத் தரமான பேட்டர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் அவர்தான். கடந்த 2022 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா அடிவாங்கிக் கொண்டிருந்தபோது ஒற்றை ஆளாக நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தவர். அப்படியிருந்தும் விராட் கோலிக்கு இந்த முறை பெரிய ஆபத்தாக இருப்பவர் முகமது அமீர். 

விராட் கோலி முந்தைய தொடர்களில் நம்பர் 3இல் இறங்குவார் என்பதால் அவருக்கு அமீரிடம் பெரிய பிரச்னை இல்லாமல் இருந்தது. இப்போது புதிய பந்தில் விராட் கோலி அமீரை சந்தித்தாக வேண்டும். இவர்களுக்கு இடையேயான மோதல் தரமான ஒன்றாக இருக்கும். 2016 ஆசிய கோப்பையில் இருவரும் தாங்கள் எவ்விதத்திலும் சலைத்தவர்கள் இல்லை என இருவரும் மோதிக்கொண்டதை யாராலும் மறக்க முடியாது. 

மேலும் படிக்க | சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!

டி20இல் அமீரின் 19 பந்துகளை மட்டுமே சந்தித்த விராட் அதில் 16 ரன்களையே அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை விராட்டின் விக்கெட்டை அமீர் எடுத்துள்ளார். அமீர் இப்போதுதான் தனது ஓய்வு அறிவிப்பை திரும்பே பெற்று மீண்டும் விளையாட வந்திருப்பதால் விராட் கோலியின் விக்கெட்டை தூக்குவது அவருக்கு பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும். 

ஜஸ்பிரித் பும்ரா vs பாபர் அசாம் 

இவர்களுக்கு இடையேயான மோதலும் சற்று பரபரப்பானதுதான். இதுவரை பும்ராவிடம் பாபர் அவுட்டானதே இல்லை. மொத்தமே 10 பந்துகளை பிடித்து 13 ரன்களையே அடித்துள்ளார். ஆனால், இன்றைய சூழலில் பாபருக்கு பெரிய அச்சுறுத்தல் பும்ராதான். 

பாபர் அமெரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியிலேயே 43 பந்துகளுக்கு 44 ரன்களை அடித்து மிகவும் சுமாராக விளையாடியிருந்தார். அந்த வகையில், பும்ராவின் புது பந்து மாயாஜாலத்தில் பாபர் விக்கெட்டை பறிகொடுக்க நல்ல வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் குல்தீப் யாதவ் இன்றைய ஆட்டத்தில் விளையாடினால் குல்தீப் - பாபர் இடையேயான மோதலும் அருமையாக இருக்கும். 

மேலும் படிக்க | IND vs PAK: வெற்றி இன்று பாகிஸ்தான் பக்கம் தான்... இந்திய அணியில் இருக்கும் பெரிய வீக்னஸ்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News