இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்சுற்று ஆட்டத்தின் முடிவுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது!
முதல்சுற்று போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 21-9 என்ற நேர் செட்டில் சோபி ஹோம்போ டாலை வென்றார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்க வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 21-13 என்ற நேர் செட்டில் நடாலியா கோச் ரோட்டேவை வென்றார். அதேவேலையில் ருத்விகா, ஆகர்ஷி, முக்தா அக்ரி ஆகிய இந்திய வீராங்கனைகளும் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் லீ சேக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
காமன்வெல்த் விளையாட்டின் முன்னாள் சாம்பியன் காஷ்யப் 21-14, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹான்ஸ் கிரிஸ்டியனை வென்றார். அதேப்போல் ஸ்ரேயான்ஷ் ஜெய்ஸ்வால் 21-4, 21-6 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான பிரனாய்-யை வெற்றிக்கொண்டார்.
மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத் 21-11, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் இங்கிலாந் வீரர் ராஜீவ் அவ்செப்பை போராடி வென்றார்.
இதனால் இந்தியவிக்கு பெரும்பாலும் ஏறுமுகமாக முடிவுகளே கிடைத்தது!