INDvsSA: ’குறி பார்த்து வீசிட்டாங்கப்பா’ தென்னாப்பிரிக்கா வீரர்களின் மைண்ட் வாய்ஸ்; வீடியோ

இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் விழுந்து தோல்வியை தழுவியது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2022, 09:06 AM IST
  • திக்குமுக்காடிய தென்னாப்பிரிக்கா அணி
  • குறி பார்த்து பந்துவீசிய இந்திய வீரர்கள்
INDvsSA: ’குறி பார்த்து வீசிட்டாங்கப்பா’ தென்னாப்பிரிக்கா வீரர்களின் மைண்ட் வாய்ஸ்; வீடியோ title=

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட 20ஓவர் தொடரில் பங்கேற்று இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணியின் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்து பெவிலியனை நோக்கி சென்றனர். ஒரு கட்டத்தில் அந்த அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.

இதற்கு முதல் சுழியை போட்டவர் தீபக் சாஹர். முதல் ஓவரின் கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாவை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அவர் தொடங்கி வைக்க, அடுத்த ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், சொல்லி அடித்தது போல் கில்லியாக பந்துவீசி அந்த ஓவரில் 3 பேரை காலியாக்கினார். 2வது பந்தில் டீகாக்கை போல்டாக்கிய அவர், 5வது பந்தில் ரோசோவை கேட்ச் என்ற முறையில் வெளியேற்றினார். அடுத்த பந்திலேயே மில்லரை திக்குமுக்காடச் செய்து, போல்ட் என்ற முறையில் வெளியேற்றினார்.

மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!

அந்த மேஜிக் பந்தை மில்லரால் நம்பவே முடியவில்லை. திடீரென இன்சுவிங்காகி ஸ்டம்பை பதம்பார்த்தது. அப்போது தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பெவிலியனில் இருந்த தென்னாப்பிரிக்கா வீரர்கள், ’சொல்லி வச்சதுபோல் குறிபார்த்து வீசி அவுட்டாங்கிறாங்கப்பா’ என மைண்ட் வாய்ஸில் பேசிகொண்டது, அவர்களின் முகத்தில் தெரிந்தது. அவுட்டான வீரர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அணியினர் முகத்தில் ஈ ஆடவில்லை. 

பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உள்ளிட்டோரும், இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சையும், தங்களின் அணியின் பேட்டிங் சொதப்பலையும் ஜீரணிக்க முடியவில்லை. மார்கிரம், பர்னல், மகாராஜ் ஆகியோரின் ஆட்டத்தில் கவுரமான ஸ்கோரை எட்டியபிறகே அவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. அப்படா தோற்றாலும் கவுரமாக தோற்கிறோம் என்ற மனநிலையை தென்னாப்பிரிக்கா வீரர்களிடம் பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தெம்பில் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை பதம்பார்த்தது.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News