ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது.
இந்நிலையில், சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு வருகிறது. டிக்கெட் விற்பனை நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரையும், பின்னர் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செய்யப்படும். டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
#Yellove for @ChennaiIPL has no bounds. Fans queuing up from last night just after the practice session by #CSK and all eager to buy tickets to watch the games live this #IPL2018 @StarSportsIndia @IPL @BCCI #WhistlePoduArmy #WhistlePodu @CSKFansOfficial pic.twitter.com/d1rR2NBkUg
— Saravanan Hari (@CricSuperFan) April 2, 2018
டிக்கெட் விலை ரூ. 1300/-, ரூ. 2500/-, ரூ. 4500/-, ரூ. 5000/-, ரூ. 6500/- என நிர்ணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடைபெறும் 7 லீக் ஆட்டங்களில் 2 ஆட்டம் 4 அணிக்கும், மற்ற ஐந்து ஆட்டங்கள் 8 மணிக்கு நடைபெறுகிறது.