பரபரப்பான ஆட்டத்தில் CSK 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியா சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Last Updated : Apr 14, 2019, 08:13 PM IST
பரபரப்பான ஆட்டத்தில் CSK 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!! title=

5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியா சென்னை சூப்பர் கிங்ஸ்!!

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.

கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 4.5 ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சுனில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கிறிஸ் லின்னுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார்.  இந்நிலையில், கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் 8.5 ஓவரில் 36 பந்துகளில் அரை சதம் அடித்த அசத்தியுள்ளார். நிதிஷ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, 10.2 ஓவரில், 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்திருந்தது கொல்கத்தா அணி. 

நிதிஷ் வெளியேறியதையடுத்து, கிறிஸ் லின்னுடன் ராபின் உத்தப்பா ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் ராபின் ரன் எதுவும் எடுக்காமலேயே அவுட் ஆனார். பின்னர் கிறிஸ் லின்னுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கிறிஸ் லின் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 82 ரன்களில் ஆட்டமிழ்நதார். பின்னர் ஆட்டத்தை ஆண்ட்ரு ருசல் தொடர்ந்தார். முதல் மூன்று பந்துகளில் 1 சிக்கர் 1 ஃபோர் உத்வேகத்துடன் ஆடியும், இந்த பத்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.  பின்னர் தினேஷ் கார்த்திக்குடன், கில் ஜோடி சேர்ந்தார். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்திருந்தது கொல்கத்தா அணி. இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 161 ரன்களை எடுத்தது. 

பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணியின் ஷானே வாட்சன், ஃபாப் டு பிளேசிஸ் ஆகியோர் தொடக்கக ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஷானே வாட்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால், சுரஷ் ராய்னா ஆட்டத்தைத் தொடர்ந்தார். பிளேசிஸ் 24 ரன்களுடன் அவுட் ஆனதால், சுரேஷ் ராய்னா, அம்பாதி ராயுடு ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தது. வெறும் 5 ரன்கள் எடுத்து ராயுடு அவுட் ஆனார். பின்னர் தோனி களம் இறங்கினார். தோனி 16 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

ஆனால் இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 19.4 ஓவரில் 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

 

Trending News