இட்லி மீண்டும் வடா பாவை வீழ்த்தியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி குறித்து சேவாக் தனது ட்விட்டர் பகக்த்தில் கருத்து தெரிவித்துள்ளார்!!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (செப்டம்பர்-19) தொடங்கியது, தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நடப்பு சாம்பியனான மும்பையை தோற்கடித்தது.
போட்டியின் பின்னர், இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பணம் செலுத்திய உரிமையை அடிப்படையாகக் கொண்ட போட்டியின் சரியான தொடக்கத்தை பாராட்டினார். MS.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சென்னைக்கு எதிரான முதல் IPL போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வரிசையாக அடுத்தடுத்து இரண்டு ஓப்பனிங் வீரர்களை இழந்தது. வாட்சன், முரளி விஜய் இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் அதன்பின் வந்த அம்பதி ராயுடு, டு பிளசிஸ் இருவரும் மிகவும் பொறுமையாக அடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
ALSO READ | MI vs CSK: IPL 2020 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தோனி படை
அம்பதி ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பாப் டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார். இருப்பினும், ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையிலேயே இருந்தது சிஎஸ்கே. கடைசி நான்கு ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட ஐந்தாம் வரிசையில் தோனிக்கு பதில் ஜடேஜாவும், அதன் பின் சாம் கர்ரனும் இர இறங்கினர்.
ஜடேஜா 5 பந்துகளில் 10 ரன்களும், கர்ரன் 6 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து தோனி இறங்கினார். கடைசி ஓவரில் CSK வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், டுபிளெசிஸ் முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார். அடுத்த பந்திலேயே அவர் 1 ரன் எடுக்க CSK அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. CSK அணியை வயதான அணி என கிண்டல் செய்த அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்தது CSK அணி.
CSK வெற்றி குறித்து வீரேந்தர் சேவாக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், IPL-லின் சிறந்த தொடக்கம். இந்த தொடர் அதிரடியாக இருக்க போகிறது. அம்பத்தி ராயூடுவும், டூபிளசிஸும் சிறப்பாகவே விளையாடினர், ஆனால் போட்டியை மாற்றியதே சாம் கர்ரான் தான். மீண்டும் ஒரு முறை வடா பாவ்-வை (மும்பை உணவு) இட்லி வீழ்த்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Great start to the IPL. Looks like it's going to be a cracker of a tournament.
Rayudu and Du plessis were brilliant but Sam Curran's cameo in the end was the difference.
Idli beats Vada Pav again #CSKvsMI— Virender Sehwag (@virendersehwag) September 19, 2020