இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது பதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக, CSK பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜிக்கு தொற்று இருப்பது திங்களன்று உறுதியானது.
ஏ.என்.ஐ உடன் பேசிய சிஎஸ்கே மூத்த அதிகாரி ஒருவர், ஹஸியின் மாதிரிகள் மீண்டும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார். "அவரது கொரோனா (Coronavirus) சோதனை முடிவுகள் பாசிடிவாக வந்தன. எனினும் அவரது மாதிரிகள் மிண்டும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னரே நாங்கள் எதையும்உறுதிப்படுத்த முடியும்" என்று அந்த அதிகாரி கூறினார்.
பாலாஜிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், மற்ற வீரர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். பாலாஜி தனிமைப்படுத்தலில் உள்ளார். "பாலாஜிக்கு தொற்று உறுதியானவுடன் தனிமைப்படுத்தலில் உள்ளார். மற்ற வீரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப வெளியேறத் தொடங்கிவிட்டனர். வெளிநாட்டு வீரர்கள் எந்த வழியாக தங்கள் நாடு திரும்ப வேண்டும் என்பது குறித்து BCCI தரப்பிலிருந்து வரும் அறிவுறுத்தலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்" என்றார் அந்த அதிகாரி.
ALSO READ: Breaking: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று
திங்களன்று, CSK-வின் லட்சுமிபதி பாலாஜிக்கும் ஒரு பஸ் கிளீனருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்திய பிரீமியர் லீக் ஆளும் குழு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் IPL 2021-ஐ உடனடியாக ஒத்திவைக்க ஒருமனதாக முடிவு செய்தது.
IPL 2021 இல் பங்கேற்ற அனைவரையும் பாதுகாப்பாக அவரவர் இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க அதன் அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் செய்வதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மிகவும் கடினமான இந்த காலங்களிலும் IPL 2021 ஐ ஒழுங்கமைக்க தங்களால் ஆன முயற்சிகளை செய்த அனைத்து சுகாதார ஊழியர்கள், மாநில சங்கங்கள், வீரர்கள், ஆதரவு ஊழியர்கள், உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், கூட்டாளர்கள் மற்றும் அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.
ALSO READ: Shocking Fact: IPL 2021 ஒத்தி போடப்பட்டதால் 2000 கோடி ரூபாய் நட்டம்- BCCI
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR