IPL Phase 2: நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை காணும் வாய்ப்பை பெறும் கிரிக்கெட் மைதானங்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்வையாளர்களை கிரிக்கெட் மைதானங்கள் காணும். ஐபிஎல் 2021இன் இரண்டாம் கட்ட போட்டிகளில் கணிசமான பார்வையாளர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2021, 09:17 PM IST
  • IPL போட்டிகள் மீண்டும் தொடங்குகின்றன
  • செப்டம்பர் 19ம் தேதி சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன
  • ரசிகர்கள் நேரடியாக மைதானத்தில் இருந்து போட்டியை ரசிக்கலாம்
IPL Phase 2: நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை காணும் வாய்ப்பை பெறும் கிரிக்கெட் மைதானங்கள்  title=

புதுடெல்லி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. ஐபிஎல் 2ம் கட்ட போட்டிகளில் ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஐ.பி.எல் அணிகளும், வீரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இரண்டாம் கட்ட போட்டிகள் தொடங்குகின்றன.

ஐபிஎல்லின் 14 வது பதிப்பின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது. இந்த முறை ஐபிஎல் இன்னும் அதிக சுவாரசியமாக இருக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு பார்வையாளர்களின் நுழைவு குறித்து பெரிய முடிவை எடுத்துள்ளது.

Read Also | இந்தியாவை பாராட்டும் கங்குலியின் கருத்துடன் ஆஷிஷ் நெஹ்ரா வேறுபடுவது ஏன்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்வையாளர்களை கிரிக்கெட் மைதானங்கள் காணும். ஐபிஎல் 2021இன் இரண்டாம் கட்ட போட்டிகளில் கணிசமான பார்வையாளர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த முறை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய கிரிக்கெட் வாரிய அதிகாரி, பிசிசிஐ மற்றும் யுஏஇ அரசு இந்த விஷயத்தில் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக தெரிவித்தார். எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் கோவிட் -19 குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் 2021இன் இரண்டாம் கட்ட போட்டிகளின் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. 27 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெறும்.

ALSO READ | லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

முன்னதாக பார்வையாளர்களை மைதானத்தில் அனுமதிப்பது தொடர்பாக BCCI மற்றும் UAE அரசாங்கத்துடன் கிரிக்கெட் வாரியம் பேசும் என்று ECB பொதுச் செயலாளர் முபாஷிர் உஸ்மானி கூறியிருந்தார்.
தடுப்பூசி போட்டு, பாதுகாப்பு பெற்றவர்கள் தான் கிரிக்கெட் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மைதானத்தின் கொள்ளளவில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தான் நிரப்பப்படும் என்பவை அடிப்படை விதிகளாக இருக்கும்.

பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ECB நெருக்கமாக வேலை செய்யும் என்று உஸ்மானி கூறினார். இதில் ரசிகர்களின் வருகையும் அடங்கும் பிசிசிஐ மற்றும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, பார்வையாளர்களின் தேவைகள் பற்றியும் முடிவெடுக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் அரங்கில் இருந்து போட்டியை ரசிக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார்.  

READ ALSO | இந்திய அணிக்கு இனி அஷ்வின் தேவையில்லை- கிறிஸ் ட்ரெம்லெட் சர்ச்சை பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News