IPL 2021 Update: IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் அதிகரித்த கொரோனா வைரஸ் (கோவிட் 19) காரணமாக, பி.சி.சி.ஐ போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்களின்படி, IPL 2021 செப்டம்பர் 19 முதல் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL 2021-ன் இறுதிப்போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும்.
BCCI தரப்பு கூறுவது என்ன?
ANI உடன் பேசிய பி.சி.சி.ஐ (BCCI) அதிகாரி ஒருவர், "ஐக்கிய அரபு அமீரக வாரியத்துடன் நடந்த பி.சி.சி.ஐ -யின் சந்திப்பு நன்றாக இருந்தது. IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கடந்த வாரம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. IPL 2021 செப்டம்பர் 19 முதல் தொடங்கி அதன் இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும். ஐபிஎல் மீதமுள்ள போட்டிகள் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும்." என்று கூறியுள்ளார்.
IPL 2021 UAE-ல் 25 நாட்கள் நடைபெறும்
IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியும் என்று பிசிசிஐ அதிகாரி கூறினார். சில வீரர்களால் விளையாட முடியவில்லை என்றால், அது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.
ALSO READ: IPL 2021 schedule: இதுதானா ஐபிஎல் 2021 இன் அட்டவணை, முழு விவரம் இதோ
IPL 2021 25 நாட்களுக்கு மட்டுமே விளையாடப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த 25 நாள் இடைவெளியில் 8 டபுள் ஹெட்டர்கள் (ஒரு நாளில் இரண்டு போட்டிகள்) இருக்கக்கூடும். IPL 2021-ஐ வெற்றிகரமாக நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ பல முயற்சிகளை எடுத்து வருகிறது, கடினமாக உழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்கள் போட்டிகளை பார்வையிட ஒப்புதல் அளிக்கப்படலாம்
கல்ஃப் நியூஸ் செய்தியின்படி, IPL 2021-ல் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர ஒப்புதல் அளிக்கப்படக் கூடும். இது பற்றி பி.சி.சி.ஐ மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 இன் மீதமுள்ள 31 போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று ஐக்கிய அரபு அமீரக (UAE) நகரங்களில் நடைபெறும். தகவல்களின் படி, துபாய் விளையாட்டு கவுன்சில், மைதானத்திற்கு 30% பார்வையாளர்கள் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்த சூழலில், IPL 2021-ன் போது பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர ஒப்புதல் அளிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: VIRAL: அனுஷ்கா-விராட் கோலி தம்பதிகளின் மகள் Vamikaவின் முதல் புகைப்படம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR