ஐபிஎல் 2022: சென்னை vs கொல்கத்தா! யார் பலம்?

ஐபிஎல் 2022 போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது.  

Written by - Sathieshkumar K | Last Updated : Mar 13, 2022, 03:13 PM IST
  • ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.
  • ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை vs கொல்கத்தா அணிகள் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
  • கொல்கத்தா புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2022: சென்னை vs கொல்கத்தா! யார் பலம்? title=

உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான ஐபிஎல்-2022 தொடரானது, வரும் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி வரை 65 நாட்கள் நடைபெற இருக்கின்றது. கோவிட் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தபட்டு வந்த ஐபிஎல் போட்டிகள், இந்த வருடம் இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பிசிசிஐ மீண்டும் இந்தியாவில் போட்டிகளை நடத்த திட்டமிட்டு மும்பை, புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றது.  இதில்  2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் சேர்ந்து, 74 போட்டிகளில் விளையாட வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் படிக்க | சர்ச்சை முறையில் ரன் அவுட்! கடுப்பான மயங்க் அகர்வால்!

இந்த வருடம் 10அணிகள் விளையாட இருப்பதால் பிசிசிஐ அணிகள் மோதும் நடைமுறையில்  புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. குரூப் எ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக 10அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடைபெற்ற தொடர்களில் அதிக முறை இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பை கைப்பற்றிய தரவரிசை அடிப்படையில் அணிகளின் வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி  5 முறை கோப்பையை வென்றுள்ளதால் குரூப் A-வில் முதல் அணியாக உள்ளது. இதுபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4முறை கோப்பையை கைப்பற்றியுள்ளதால் குருப் ”B”வில் முதல் அணியாக இடம்பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து  கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரூ, டெல்லி, பஞ்சாப், லக்னோ, குஜராத் அணிகள் அடுத்தடுத்து இடத்தை பெற்றிருக்கிறது. 

இந்த தரவரிசை படி, குரூப் ”A”வில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, லக்னோ அணிகளும்,  குரூப் “B”வில் சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. அடுத்ததாக ஒரு அணி மற்ற அணிகளோடு எத்தனை போட்டிகள் விளையாடுவார்கள் என்ற விவரங்களை காணலாம். இதற்குமுன் மற்ற அணிகளோடு 2 போட்டிகள் நடைபெறும். தற்போது  நடைமுறைபடி  தனது குரூப்-பில் உள்ள 4அணிகளோடு இரண்டு முறையும், தனக்கு நிகராக குரூப் ”B”வில் உள்ள அணியோடு இரண்டு முறையும்,மற்ற 4 அணிகளோடு ஒரு முறை என மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, சென்னை அணி குரூப் ”பி” வில் ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் அணிகளோடு இரண்டு முறையும், தனக்கு நிகராக குரூப் ”A”வில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2 முறையும், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, லக்னோ அணிகளோடு ஒருமுறை என மொத்தம் 14 போட்டிகளில் விளையாட உள்ளது.

ipl

மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!

முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்

”தல” தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன்  சென்னை அணி நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் புதிதாக எடுக்கபட்ட இளம் வீரர்களுடன் புதிய வியூகத்தில் தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் வரும் 26ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு பலபரீட்சை மேற்கொள்ள இருக்கிறது. 
இதற்கு முன் சென்னை vs கொல்கத்தா அணிகளுக்கிடையேயான  வெற்றி மற்றும் புள்ளிவிவரங்களை காணலம்.

- ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை vs கொல்கத்தா அணிகள் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 

- இதில் 17 முறை சென்னை அணியும், 8 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

- இதில் 2012ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

- இதற்கு பதிலடி கொடுக்கு வகையில் சென்னை அணி சென்ற ஆண்டு இறுதி போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

- சென்னை அணி இதுவரை 2010, 2011, 2018, 2021ஆண்டுகளில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

- கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014-ல் என இதுவரை 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

- கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி அதிகபட்சமாக 2021-ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் 220 ரன்கள் எடுத்துள்ளது. 

கிரிக்கெட் விளையாட்டின் மாயஜாலகாரரான தோனியின் புதிய வியூகத்துக்கு இந்த வருடம் கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக டெல்லி அணியிலிருந்து வந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் சென்னை அணியை தோற்கடிக்க புதிய வியூகங்களை செயல்படுத்துவாரா? எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள்? என்பதை காண இரு அணி ரசிகர்களும் ஆர்வமுடனும், சென்னை அணியின் அதிரடி ஆட்டத்தை காணவும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | ப்பா.. என்ன மனுசன்யா இவரு.. 40 வயதில் தல தோனியின் FIT!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News