ரிசர்வ் டே ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு? தோனி - ஹர்திக் பிளான் ரெடி..!

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்றிரவு நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மழையால் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 29, 2023, 06:35 PM IST
  • இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டி
  • மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
  • இன்று முழுவதும் மழை பெய்யவில்லை
ரிசர்வ் டே ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு? தோனி - ஹர்திக் பிளான் ரெடி..! title=

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஞாயிற்றுகிழமை நடைபெற வேண்டிய இப்போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது. ரிசர்வ் டே நாளில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு மழையால் ஆபத்து உள்ளதா? என ரசிர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை நல்ல செய்தியே இருக்கிறது. ஏனென்றால் நேற்றிரவு வெளுத்து வாங்கிய மழை, அதன்பிறகு பொழியவில்லை. இன்று நாள் முழுவதும் மழை பெய்யாததால், குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போட்டி தயார் நிலையில் இருக்கின்றன. 

மேலும் படிக்க | மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?

இரவு 8 மணிக்கு மேல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை தகவல்கள் கூறுகின்றன. இதுதான் இப்போதைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இருந்தாலும் போட்டி முழுவதுமாக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் என்பது மிக குறைவு என்றும் கூறப்படுகிறது. இதனால் மைதானத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை அணி வெற்றி பெற்றால் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். குஜராத் அணி வெற்றி பெற்றால் 2வது முறையாக ஐபிஎல் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைக்கும். 

ஒருவேளை மழைபோட்டியின் இடையே குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஓவர்கள் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும். இதற்கும் வழி இல்லை என்றால் ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டு, லீக் சுற்றுகளின் முடிவில் அதிக வெற்றிகளை பெற்ற அணிக்கு கோப்பை கொடுக்கப்படும். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட குஜராத் டைட்டன்ஸ் அணி அதிக வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இதனால் அந்த அணிக்கே சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். 

இது சென்னை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. முதலாவது குவாலிஃபையரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை, சென்னை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால், ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்காவிட்டால் கோப்பையை சென்னை அணியுடன் பகிர்ந்தளிப்பது மட்டுமே சிறந்த முடிவாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ஷிவம் துபே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, சுப்ரான்சான்ட்னர், சுப்ரான்சான்ட்னர், மிட்செல் சான்ட்னர். ஷேக் ரஷீத், ஆகாஷ் சிங், பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், சிசண்டா மகலா, அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்கர்கேகர், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து 

குஜராத் டைட்டன்ஸ் அணி 

விருத்திமான் சாஹா (wk), ஹர்திக் பாண்டியா, சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோஹித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், ஸ்ரீகர் பாரத், சிவம் மாவி, ஒடியன் ஸ்மித், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரதீப் சங்வான், மேத்யூ வேட், ஜெயந்த் யாதவ், தாசுன் ஷனகவ், , அபினவ் மனோகர், அல்சாரி ஜோசப், தர்ஷன் நல்கண்டே, உர்வில் படேல், யாஷ் தயாள்

மேலும் படிக்க | CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News