IPL 2023, KKR vs SRH: இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் தங்கள் முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டியிலும் இந்த அணிகள் வெற்றிப் பயணத்தை தக்கவைத்துக் கொள்ள களத்தில் போராடவுள்ளன. இன்றைய ஐபிஎல் போட்டியைக் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
கொல்கத்தா Vs ஹைதராபாத் ஆட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் இந்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நேரலை ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.
ஐபிஎல் 2023 தொடரின் புள்ளிகள் பட்டியல் நிலவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது ஐபிஎல் 2023 தொடரின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9வது இடத்திலும் உள்ளது.
மேலும் படிக்க: குஜராத்-பஞ்சாப் போட்டியில் 8 பெரிய சாதனைகளை செய்த ஷுப்மான் கில்
இரு அணிகளின் கடைசி ஆட்டத்தின் விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் வெங்கடேஷ் ஐயர் 83 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் எடுத்தனர்.
மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விளையாடியது. அந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ராகுல் திரிபாதி 74 ரன்கள் எடுத்தார்.
#IPL2023 | இன்றைய ஆட்டம் யார் யாருக்கு?#IPL | #TATAIPL2023 | #KKRSvsSRH | #SRHvsKKR | #ZeeTamilNews
Android Link: https://t.co/3Qd30JcqXx
Apple Link: https://t.co/TNhzAUNkzwMatch 19 Preview... : https://t.co/DC5foxtQuf pic.twitter.com/VYVrgVoPV1
— Zee Tamil News (@ZeeTamilNews) April 14, 2023
ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதியதில் யாருக்கு வெற்றி அதிகம்?
இரு அணிகள் மோதிய ஐபிஎல் போட்டிகளின் சாதனைகளைப் பார்த்தால், இவ்விரு அணிகளுக்கும் இடையே இதுவரை 23 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 15 போட்டிகளில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், கடைசி 5 போட்டிகளின் முடிவுகளைப் பார்த்தால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 வெற்றியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் படிக்க: ஜெயிச்ச பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் வச்ச ஆப்பு... ரூ.12 லட்சம் போச்சு..!
ஈடன் கார்டன் பிட்ச் ரிப்போர்ட்:
ஈடன் கார்டனின் மேற்பரப்பு பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளத்திற்கு பெயர் பெற்றது. ஸ்டேடியத்தின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கு ஆதரவாக இருந்தாலும், பிந்தைய போட்டிகளில் இது பந்துவீச்சாளர்களுக்கு, குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின் சராசரி ஸ்கோர் 170 ரன்கள் ஆகும். அதேபோல இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி இங்கு சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. இந்த மைதானத்தில் 60 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளனர்.
இன்றைய போட்டியில் வரிசைகட்டும் சாதனைகள்:
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா ஐபிஎல் போட்டியில் 200 பவுண்டரிகள் அடிக்க 3 பவுண்டரிகள் தேவை.
- கொல்கத்தாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் தொடரில் 150 பவுண்டரிகள் அடிக்க 10 பவுண்டரிகள் தேவை.
- டி20 கிரிக்கெட்டில் 900 பவுண்டரிகளை அடிக்க ஜேசன் ராய்க்கு இரண்டு பவுண்டரிகள் தேவை.
- டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய லாக்கி பெர்குசனுக்கு 4 விக்கெட்டுகள் தேவை.
- ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதிக்கு ஐபிஎல்லில் 2000 ரன்களை முடிக்க 94 ரன்கள் தேவை.
- ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாட இன்னும் ஒரு போட்டி உள்ளது.
மேலும் படிக்க: ஏம்பா ரபாடா.. வந்த உடனே சாதனையா? மலிங்கா ரெக்கார்டு காலி - இனி இவர் நம்பர் ஒன்..!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா (கேப்டன்), என் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, டிம் சவுத்தி, மன்தீப் சிங், ஜகதீப் சிங் , லிட்டன் தாஸ், டேவிட் வைஸ், அனுகுல் ராய், குல்வந்த் கெஜ்ரோலியா, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம்:
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன், அடில் ரஷித், அக்கேல் ஹொசைன், க்ளென் பிலிப்ஸ் , அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் டாகர், உபேந்திர யாதவ், அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, சன்வீர் சிங், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, விவ்ராந்த் சர்மா
மேலும் படிக்க: IPL 2023: சென்னை அணிக்கு பெரிய அடி... தொடரில் இருந்து விலகுகிறாரா தோனி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ