IPL 2023, Rohit Sharma: ஐபிஎல் தொடரில் நேற்றைய குஜராத் - மும்பை அணிக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஒளிப்பரப்பின்போது, இந்திய மூத்த வீரர் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் வர்ணனையாளராக செயல்பட்டார். அப்போது பேசிய அவர்,"ரோஹித் சர்மா ஓய்வு எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.
சில போட்டிகளுக்கு பின் அவர் மீண்டும் வரலாம், ஆனால் இப்போது சிறிது ஓய்வு எடுங்கள். அவர் சற்று ஆர்வத்துடன் இருக்கிறார். ஒருவேளை அவர் WTC குறித்தும் யோசித்துக்கொண்டிருக்கலாம். அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன்" என்றார்.
குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சேஸிங் செய்த மும்பை அணிக்கு, பேட்டிங் சரியாக அமையவில்லை. ஓப்பனரான ரோஹித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | Captain Of IPL: ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள்! தோனி இல்லையா?
கடந்த சில சீசன்களை போலவே, ரோஹித் ரன்களை எடுப்பதில் சற்று திணறுகிறார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ரோஹித் கடந்த ஏழு இன்னிங்ஸ்களில் 135.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 181 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும் நான்கு முறை, அவர் 20 முதல் 45 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 65 ரன்களாகும். இது இந்த ஆண்டு அவரது ஒரே அரைசதம் ஆகும். இது டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக அவருக்கு ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுத்தந்தது.
கவாஸ்கர் மேலும் கூறுகையில்,"இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு அதிசயத்தால் மட்டுமே பிளேஆஃப்களுக்கு அழைத்துச் செல்ல முடியும். பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அவர்கள் சில அசாதாரண கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதே தவறுகளை தொடர்ந்து செய்யும் வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், திரைக்குப் பின்னால் சில வேலைகளைச் செய்யுமாறும் மும்பை அணிக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
"பந்து வீச்சாளர்கள் அதே தவறுகளைச் செய்யும்போது, அவர்களை அணியில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். ஒரு சில ஆட்டங்களுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும். அந்த இடைவெளியில் உங்களின் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தவறாக பந்துவீசுகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்" என்றார் அவர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில், முதல் பாதி முடிந்துவிட்டது எனலாம். மொத்தம் ஒவ்வொரு அணிகளும் தலா 14 போட்டிகள் விளையாடும் நிலையில், தற்போது அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில், சென்னை, குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | சென்னை - பஞ்சாப் போட்டி: டிக்கெட் விற்பனை 27-ம் தேதி தொடக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ