கேல் ரத்னா விருது, சான்றும் வழங்கினார் ஜனாதிபதி

Last Updated : Aug 29, 2016, 01:47 PM IST
கேல் ரத்னா விருது, சான்றும் வழங்கினார் ஜனாதிபதி title=

விளையாட்டு வீரர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராஜிவ் கேல் ரத்னா விருதுகைள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கு கவுரவித்தார். 

சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் வீராங்கனை சிந்து வெள்ளி பெற்றார். இது போல் சாக்ஷி வெண்கலம் வென்றார், தீபா கர்மாகர் அவர்கள் 4-வது இடம் பெற்றார். இவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இதனையொட்டி கடந்த வாரம் 2016-ம் ஆண்டுக்கான கேல் ரத்னா, துரணோச்சாரியார், அர்ஜீனா விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதும், சான்றும் வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். 

Trending News