டெல்லி அணிக்கு சேவாக் கொடுத்திருக்கும் முக்கிய டிப்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் முக்கிய டிப்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 28, 2022, 07:38 PM IST
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சேவாக் அறிவுரை
  • ஷர்துல் தாக்கூரை முன்கூட்டியே களமிறக்குங்கள்
  • ரிஷப் பன்ட் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும்
டெல்லி அணிக்கு சேவாக் கொடுத்திருக்கும் முக்கிய டிப்ஸ்  title=

இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னனான வீரேந்திர சேவாக் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். ஐபிஎல் 2022 தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதற்கான காரணத்தை அவர் பின்பாயிண்டாக சுட்டிகாட்டியுள்ளார். டெல்லி அணி ஷர்துல் தாக்கூரை பந்துவீச்சைக் காட்டிலும் பேட்டிங்கில் அதிகம் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆல்ரவுண்டர்களை டாப் ஆர்டரில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அணுகுமுறையை டெல்லி அணி பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | மேக்ஸ்வெல் கொடுத்த பார்டி - விராட்கோலி போட்ட குத்தாட்டம்

ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படாதபோது அவரை பேட்டிங்கில் கூடுமானவரை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். டேவிட் வார்னர் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்துள்ள சேவாக், அவர்கள் 15 முதல் 16 ஓவர்கள் வரை விளையாடினால் எதிரணியினர் பரிதாப நிலைக்கு சென்றுவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். அவர்கள் இப்போது விளையாடிக் கொண்டிருப்பது போலவே தொடர்ந்து விளையாட வேண்டும், அவர்கள் அவுட்டாகும்பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

கேப்டனாக இருக்கும் ரிஷப் பன்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேட்ச் வின்னிங் பர்மாமென்ஸ் என குறிப்பிடப் படும்படியான ஆட்டம் டெல்லி அணியில் பார்க்க முடியவில்லை என சேவாக் தெரிவித்துள்ளார்.  ரோமன் பவல் பேட்டிங் திறமை இருந்தாலும், அணியின் வெற்றிக்காக இன்னும் பயன்பட வில்லை எனத் தெரிவித்துள்ள சேவாக், கடந்த ஆண்டு ஹெட்மயர் மற்றும் ஸ்டொயினஸ் ஆகியோர் பினிஷர் பணியை சிறப்பாக செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகையின் ரியாக்ஷன் - அவர் யார் தெரியுமா?

இந்த ஆண்டு டெல்லி அணியின் அந்த இடம் காலியாக உள்ளது. பினிஷர் ரோல் யார் செய்கிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. கேப்டன் ரிஷப் பன்ட் களத்துக்கு வரும்போது ஆட்டத்தின் போக்கை கணித்து அதற்கு ஏற்ப விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த டெக்னிக்குகளை ஆட்டத்தில் பின்பற்றினால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News