இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு அவர் தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார். அவரது புகழ் இன்றளவிலும் உச்சியில் தான் உள்ளது.
2020 ஆம் ஆண்டில் அணியின் மோசமான விளையாட்டு மூலம், ரசிகர்களை ஏமாற்றிய CSK அணி, முதல் முறையாக பிளேஆஃப்களை அடையத் தவறிய நிலையில், தோனி 2021 ஆம் ஆண்டில் அணியின் செயல்திறனை உயர்த்தியுள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று காரணமாக, மே மாதத்தில் ஐபிஎல் 2021 இடைநீக்கம் செய்யப்பட்டபோது, புள்ளிகள் அட்டவணையில் சிஎஸ்கே 2 வது இடத்தில் இருந்தது.
இப்போது 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக நான்கு வீரர்களை மட்டுமே ஐபிஎல் உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், 'தல' தோனியை (MS Dhoni) சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளுமா என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கருத்துப்படி, தோனி கண்டிப்பாக அணியில் தக்கவைக்கப்படுவார்.
சென்னை அணியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு எதிர்காலத்திற்கான ஒரு அணியை உருவாக்க தோனியும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ALSO READ: MS Dhoni: தல தோனி- சாக்ஷியின் திருமண நாளுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் ஐபிஎல் போட்டியில் தோனி மற்றொரு அணிக்காக விளையாடக்கூடும் என்ற கருத்தை மறுத்தார். சி.எஸ்.கே-வில் தோனி விளையாடாத பட்சத்தில், அவர் அந்த அணியின் பயிற்சியாளராக மாறக்கூடும் என அவர் கூறினார். "எம்.எஸ். தோனி சென்னை அணியை விட்டு வெளியேறப்போவதில்லை. அவர் அந்த அணியின் மகாராஜா. அவர் ஒரு பயிற்சியாளராக மாறக்கூடும்” என்று ஹாக் ட்விட்டரில் தெரிவித்தார்.
தோனி ஒரு அபாரமான வீரராக இருந்துள்ளார். விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அவர் அணிக்கு அளித்துள்ள பங்களிப்பு ஏராளம். பெரிய போட்டிகளில் அவர் மிக அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். தற்போது CSK அணியில் உள்ள இளம் வீரர்களை வழிநடத்துவதற்கான பொறுப்பு தோனியிடம் உள்ளது.
இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு பார்க்கையில், தோனியை தக்க வைத்துக் கொள்வது சி.எஸ்.கே அணிக்கு பல பயன்களைத் தரும். மேலும் அணியை மேன்மையடையச் செய்ய தோனியை தங்கள் பக்கத்தில் வைத்திருப்பது ஒரு கேம் சேஞ்சராக இருக்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ஃபஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, என்.ஜகதீசன், ராபின் உத்தப்பா, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா (Ravinder Jadeja), சாம் குர்ரான், டுவைன் பிராவோ, கர்ன் ஷர்மா, ஆர். சாய் கிஷோர், மிட்செல் சாண்ட்னர், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஷார்துல் தாக்கூர், லுங்கி என்ஜிடி, கே.எம். ஆசிப், மொயீன் அலி, கே கவுதம், சேதேஷ்வர் புஜாரா, எம்.ஹரிசங்கர் ரெட்டி, கே. பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்.
ALSO READ: CSK அணி இந்த இங்கிலாந்து வீரரை வேற லெவலுக்கு கொண்டு போயிடுச்சு: Graham Thorpe
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR