இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாடல் ஒன்று பாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பின் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தோனியின் எதிர்காலம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, `அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்பதோடு முடித்துக்கொண்டார்.
அதே சமயம் தோனி தரப்பிலிருந்து ஜனவரி வரை பொறுமையாக இருங்கள் என்ற பதிலே வருகிறது. இதனிடையே தற்போது சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் யாரோ ஒருவர், தோனி பாடல் பாடும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
அதில், தோனி மைக் பிடித்து பழைய இந்தி பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த வீடியோ பார்த்த தோனி ரசிகர்கள் பலர் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.